ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது… சுட சுட தயாராகும் அப்டேட் – வைரலாகும் பதிவு!
Dhanush OM Movie Audio Launch Update | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பிற்காக மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பண்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சினிமா துறையில் இவரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் 1. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது… வைரலாகும் பதிவு:
அதன்படி இந்த ஓம் சாப்டர் ஒன் படம் வருகிற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது இருக்கும் என்பது குறித்து கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்த நிலையில் ஓம் படக்குழு தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட்டை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இது தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… பார்டர் 2-ன் வெற்றியைத் தொடர்ந்து, அஹன் ஷெட்டியின் புதிய படம் சங்கி.. வெளியானது அப்டேட்!
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
🎤🏟️ – 3️⃣ PM https://t.co/ubLdC5NbKJ
— Wunderbar Films (@wunderbarfilms) November 1, 2026