பிக்பாஸில் அவினாஷ் – தன்யா சண்டை குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 8-வது வாரம் முடிவடைந்து 9-வது வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று 8-வது வார இறுதி நாளில் வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். கடந்த 7-வது வாரம் இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவில்லை. அதன் காரணமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் எபிசோடு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டிய நிலையில் நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியது பாராட்டிற்குரியதாக மாறியது. இந்த நிலையில் இன்றைய எபிசோடிலும் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே பல கேள்விகளை எழுப்புகிறார்.




அவினாஷ் – தன்யா சண்டை குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி:
அதன்படி இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில் விஜய் சேதுபதி நேரடியாக தன்யா மற்றும் அவினாஷ் இடையே நடந்த சண்டை குறித்து வெளிப்படையாக பேசுகிறார். அதில் தன்யாவின் கருத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் அவினாஷ் வரும் போது எதிரணியில் இருந்த அவரது தங்கை அக்ஷிதா ஏன் அவரை தடுக்கவில்லை என்றும் நீங்களும் அந்த விளையாட்டில் இருக்கீர்கள் தானே என்று வெளிப்படையாக கேள்விகளை எழுப்பினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மோகன்லால் படத்தை இயக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது – இயக்குநர் ஜித்து மாதவன்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day56 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/dlgwLA8JL1
— Vijay Television (@vijaytelevision) November 1, 2026
Also Read… நான் கனவிலும் நினைக்கவில்லை… மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் நடிகர் ஊர்வசி பேச்சு!