பிக்பாஸில் என்ன நடக்குது? இந்த வாரம் எவிக்டாவது யார் தெரியுமா – வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil Season 10 this week eviction update | தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 8-வது வாரம் யார் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே தற்போது அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 9 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் வைல்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். மொத்தம் 24 போட்டியாளர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று 8-வது வாரத்திற்கான இறுதி நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் சேதுபதி வரும் இன்றைய எபிசோடில் வீட்டில் உள்ள மொத்த போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ள நிலையில் யார் போட்டியில் இருந்து வெளியேற உள்ளனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 15 போட்டியாளர்களில் ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசன் இருவரிடமும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் என்ன நடக்குது? இந்த வாரம் எவிக்டாவது யார் தெரியுமா:
இந்த நிலையில் இன்று 8-வது வார இறுதியில் யார் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து கரிஷ்மா எவிக்டாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் காமென்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் வைல்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் கதைச் சுறுக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
🚨 EXCLUSIVE UPDATE 🔥
#Karishma EVICTED
Enna Kathai 2.0
Sam @DeadmanxXd | Vignesh @VIGNES_BB | @MageshKumarK13 | @SekarOffl
#BiggBossTamil10 https://t.co/rBJciJD0EY— Abi’s POV ✨ (@AbisPOV_) October 31, 2026
Also Read… பிக்பாஸில் ஜேசனிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட தன்யா… வைரலாகும் வீடியோ!