10 ஆண்டுகளைக் கடந்தது தனுஷின் கொடி படம்… கொண்டாடும் ரசிகர்கள்!
10 Years Of Kodi Movie | நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கொடி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் இரட்டை வேடங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படி தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் என்னென்ன என்றால் ஒன்று கொடி மற்றொன்று நானே வருவன். இந்த இரண்டு படங்களில் நானே வருவேன் படத்தைவிட கொடி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் கொடி.
இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.எஸ். துறை செந்தில் குமார் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருந்த நிலையில் ஒரு தனுஷிற்கு நடிகை த்ரிஷா மற்றொரு தனிஷிற்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் அப்பாவாக கருணாஸ் மற்றும் அம்மாவாக நடிகை சரண்ய பொன்வண்ணன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




10 ஆண்டுகளைக் கடந்தது தனுஷின் கொடி படம்… கொண்டாடும் ரசிகர்கள்:
இந்தப் படத்தில் இரட்டையர்களாக பிறப்பவர்களுக்கு என்று ஒரு தனி இன்ஸ்டிங் உள்ளது என்றும் அப்படி இருக்கும் சூழலில் இரட்டையர்களில் ஒருவர் உயிரிழந்தால் மற்றவருக்கு உயிரிழந்தவரின் குணங்கள் சேர்ந்துவிடும் என்று காட்டப்பட்டு இருந்தது. அப்படி இருக்கும் சூழலில் ஒரு தனுஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் சாதுவாக இருக்கும் தனுஷ் என்ன எல்லாம் செய்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்தது வேலாயுதம் படம்… இயக்குநர் வெளியிட்ட பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
10 YEARS of #Kodi
A fiery ride that we’re still not over. 🔥 https://t.co/fiYB9UsfED
— Sony Music South India (@SonyMusicSouth) October 27, 2026