Nayanthara: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் என்ன? – அப்டேட் இதோ!
Mookuthi Amman 2 Update: நடிகை நயன்தாராவின் நடிப்பில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது, 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா (Nayanthara). இவரை மக்கள் மற்றும் ரசிகர்கள் “லேடி சூப்பர்ஸ்டார்” (Lady Superstar) என்றும் அழைப்பதுண்டு. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம் ஹாய் (Hi Movie). இதை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக வெளியானது. இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2).
இதை இயக்குநர் சுந்தர் சி (Director Sundar C) இயக்க, மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்.. பிக் பாஸில் இந்த வாரத்திற்கான சிறப்பான டாஸ்க் – வைரலாகும் ப்ரோமோ!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் அப்டேட்:
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் 2020ல் வெளியான மூக்குத்தி அம்மன் படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது பேண்டஸி மற்றும் தெய்வீகம் கலந்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜூன் ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!
அந்த விதத்தில் இப்படத்திற்கு யு/ ஏ தரச் சென்சார் கிடைத்துள்ளதாம். இதனால் 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படமானது மொத்தமாக 2 மணி நேரம் 25 நிமிடங்கள் டைமிங் கொண்டுள்ளதாம். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்து வைரலாகும் பதிவு:
Sundar C.-directed #MookuthiAmman2, starring #Nayanthara, has been awarded a U/A certificate by the Censor Board. The film’s runtime is 2 hours and 25 minutes. 🔥 https://t.co/4dXqeZShgI
— Movie Tamil (@_MovieTamil) October 27, 2026
இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிகை நயன்தாரா லீட் நாயகியாக நடிக்க, அவருடன் ஊர்வசி, ரெஜினா கசான்ட்ரா, சுனில், சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளதாம். இப்படம் 2026 நவம்பர் மாதத்தில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.