AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

Firecracker Safety: தீபாவளியின்போது திறந்தவெளியில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாத இடத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும்; வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்கக் கூடாது. தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த ஓடும் நீரில் 20 நிமிடங்கள் குளிர்வித்து, பாதிப்பு தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?
தீபாவளி Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Oct 2026 16:30 PM IST

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், சிறிய கவனக்குறைவுகூட விபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே, பட்டாசு வெடிப்பதற்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். வீடுகளுக்கு அருகில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது.

Also Read: மணக்கும் தீபாவளி மத்தாப்பூ பலகாரங்கள் என்ன செய்யலாம்?

பட்டாசுகளைப் பயன்படுத்தும் முறை

பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்பு அவற்றின் மீது குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாகப் படித்துப் பின்பற்ற வேண்டும். பட்டாசுகளை கையில் வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது. ராக்கெட் போன்ற பட்டாசுகளைத் திறந்த வானத்தை நோக்கி, மின்கம்பிகள் இல்லாத இடத்தில் மட்டுமே செலுத்த வேண்டும். பட்டாசுகளைப் பற்ற வைப்பதற்கு நீண்ட தீக்குச்சி அல்லது பாதுகாப்பான தீப்பற்றும் கருவியைப் பயன்படுத்தலாம். பட்டாசு வெடிக்கும்போது முகத்தை அருகில் கொண்டு செல்வதோ, அதன் மீது குனிந்து பார்ப்பதோ கூடாது.

குழந்தைகளுக்குக் கூடுதல் கண்காணிப்பு அவசியம்

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் அல்லது பெரியவர்கள் அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும். தளர்வான ஆடைகள், நைலான் மற்றும் பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய செயற்கைத் துணிகளைத் தவிர்த்து, உடலுடன் பொருந்திய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. பட்டாசுகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும், பட்டாசுகளை ஒரே நேரத்தில் பலவற்றைப் பற்ற வைக்காமல், ஒவ்வொன்றாக வெடிக்க வேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்க வேண்டாம்

பற்ற வைத்தும் வெடிக்காத பட்டாசுகளை உடனடியாகத் தொடவோ, மீண்டும் பற்ற வைக்கவோ கூடாது. சிறிது நேரம் காத்திருந்து, பாதுகாப்பான முறையில் தண்ணீரில் நனைத்து அப்புறப்படுத்த வேண்டும். பயன்படுத்திய பட்டாசுகளையும் தண்ணீர் நிரப்பிய வாளியில் போடலாம். பட்டாசு வெடிக்கும் இடத்தில் தண்ணீர் மற்றும் மணல் நிரப்பிய வாளிகளைத் தயாராக வைத்திருப்பது தீ விபத்துகளைச் சமாளிக்க உதவும்.

Also Read: மணக்கும் தீபாவளி மத்தாப்பூ பலகாரங்கள் என்ன செய்யலாம்?

விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி?

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்தை உடனடியாகக் குளிர்ந்த ஓடும் நீரில் சுமார் 20 நிமிடங்கள் குளிர்விக்க வேண்டும். தீக்காயத்தின் மீது ஐஸ், எண்ணெய், பற்பசை அல்லது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைத் தடவக் கூடாது. காயம் தீவிரமாக இருந்தாலோ, கண்களில் பாதிப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பட்டாசுகளால் ஏற்படும் புகை மற்றும் அதிக ஒலி பாதிப்புகளிலிருந்து குழந்தைகள், முதியவர்கள், சுவாசப் பிரச்சினை உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us