சேலம் பிரபல ரவுடி கொலை.. திட்டமிட்டு தீர்த்துக் கட்டியது எப்படி.. கைதான 7 பேர் பகீர் வாக்குமூலம்!
Salem Rowdy Murder : சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி நடு ரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு பிரபல ரவுடியின் ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர் .
சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் உதயகுமார். பிரபல ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மீது, கொலை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மோசடி வழக்கு தொடர்பாக அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பைக்கில் சேலம் ஜங்ஷன் புது ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரபல ரவுடி கொலையில் 7 பேர் கைது
இதில், சேலம், கிச்சி பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறை அருகே மனைவியுடன் காரில் சென்ற போது மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது. இந்த கொலை சம்பவத்திற்கு டேவிட் பணம் மற்றும் பல்வேறு உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஜான் ஆதரவாளர்கள் டேவிட்டை கொலை செய்ய திட்டமிட்டனர். அத்துடன், சேலம் மத்திய சிறையில் உள்ள ஒரு பிரபல ரௌடியும், டேவிட்டை கொலை செய்ய ஜான் ஆதரவாளர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: டெங்குவுக்கு மத்தியில் அச்சுறுத்தும் எலி காய்ச்சல்.. கன்னியாகுமரியில் மின்துறை ஊழியர் பலி.. பீதியில் மக்கள்!




ரவுடியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு
இதைத் தொடர்ந்து, சேலம் சிறையில் உள்ள பிரபல ரவுடியின் திட்டத்தின் படி இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், ஜான் ஆதரவாளர்கள் திட்டமிட்டு டேவிட்டை கொலை செய்தனர். அதன் அடிப்படையில், போலீசார் ஜான் ஆதரவாளர்கள் 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, டேவிட் சடலம் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில், அவரது வீடு மற்றும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கொலை சம்பவத்தின் பின்னணி
முன்னதாக, மோசடி வழக்கில் தொடர்புடைய டேவிட் முன் ஜாமின் பெற்ற நிலையில், அழகாபுரம் காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். வழக்கமாக சம்பவத்தன்று காலை கையெழுத்து போட்டுவிட்டு பைக்கில் சென்ற போது இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருந்தது. இதில், டேவிட் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்தை விட்டு காயம் ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் சேலம் மாநகர துணை ஆணையர் பாஸ்கர் பார்வையிட்டிருந்தார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!