AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வலிப்பு வந்தது போல நாடகம்.. சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பிய கைதிகள்.. பரபரப்பு தகவல்கள்!

Theni Prisoners Escape IG Explanation : தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்ற நிலையில், தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி பார்வையிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறிய அதிர்ச்சி காரணங்களை பார்க்கலாம் .

வலிப்பு வந்தது போல நாடகம்.. சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பிய கைதிகள்.. பரபரப்பு தகவல்கள்!
தேனி சிறை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Oct 2026 15:20 PM IST

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு, அடைக்கப்பட்டிருந்த 15- க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி சிறைக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரவு 10: 20 மணி அளவில் கைதிகளில் சிலருக்கு வலிப்பு வந்தது போல நடித்துள்ளனர். அவர்களை சிறை காவலர்கள் பார்க்க சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். குற்றவாளிகள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. ஆனால், அது குறித்த விவரங்களை வெளியிடுவது சரியாக இருக்காது.

17 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

இந்த சம்பவத்தில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய கைதிகள் கைது செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதேபோல, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!

சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பிய கைதிகள்

தேனி மாவட்ட சிறையில் 24 மணி நேரமும் சிறை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். இந்த நிலையில், நேற்று இரவு கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறை காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளனர். அவர்கள் வலிப்பு வந்தது போல நடித்து சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தேக்கம்பட்டியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

டிரோன் கேமராக்கள் மூலமாக தேடுதல் வேட்டை

கைதிகளை பிடிப்பதற்காக தேனி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டதுடன், சிறை அமைந்துள்ள பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் போலீசார் சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கைதிகள் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்பன உள்ளிட்ட தேடுதல் வேட்டைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், டிரோன் கேமராக்கள் மூலம் தப்பி ஓடிய கைதிகளை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!

Follow Us