தேனி சிறையில் இருந்து எஸ்-ஆன 17 கைதிகள்.. ட்ரோன் மூலம் தூக்கிய தனிப்படை.. காட்டுப்பகுதியில் மேலும் 8 கைதிகள் கைது!
Theni Prisoners Caught : தேன் மாவட்ட சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் 5 பேர் பிடிப்பட்ட நிலையில், காட்டுப் பகுதியில் இருந்து மேலும் 8 கைதிகளை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர் .
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில், நேற்று திங்கட்கிழமை இரவு ஒரு கைதி வலிப்பு வந்தது போல் நடித்து, சிறை காவலர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேனி மாவட்ட காவல்துறை சார்பில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில், முதல் கட்டமாக 5 கைதிகள் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும் 8 கைதிகளை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். தேனி சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தப்பி செல்லாத வகையில், எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டது.
டிரோன் கேமராவில் சிக்கிய கைதிகள்
இதன் காரணமாக கைதிகள் வெளியில் தப்பி செல்லாமலும், பொது மக்களுடன் கலக்காமலும் தடுக்கப்பட்டனர். அந்த வகையில், தேனி மாவட்ட சிறை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அந்த கைதிகள் பதுங்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில், ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் அந்த காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில், காட்டு பகுதியில் உள்ள ஒற்றையடி பாதையில் 8 கைதிகள் ஒருவர் பின் ஒருவராக சென்றது தெரியவந்தது.
மேலும் படிக்க: சேலம் பிரபல ரவுடி கொலை.. திட்டமிட்டு தீர்த்துக் கட்டியது எப்படி.. கைதான 7 பேர் பகீர் வாக்குமூலம்!




மேலும் 8 கைதிகள் அதிரடி கைது
அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் அதிரடியாக காட்டுப் பகுதிக்குள் நுழைந்து கைதிகள் அனைவரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, அவர்களை சிறைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் தற்போது 13 கைதிகள் பிடிபட்ட நிலையில், எஞ்சிய 4 கைதிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் 9 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து கைதிகள் தப்பி சென்றது எப்படி
தேனி கிளை சிறையில் 4 பிளாக்குகள் உள்ளன. இதில், தப்பி சென்ற 17 கைதிகள் உட்பட 30 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், வலிப்பு வந்தது போல நடித்து 17 கைதிகள் 3 அடுக்கு பாதுகாப்பை மீறி தப்பி சென்றுள்ளனர். தப்பி சென்ற 17 கைதிகளில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எப்படி தப்பி சென்றார் என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
தப்பி சென்ற கைதிகள் விவரம்
- லிங்க பிரகாஷ்.
- சிலம்பரசன்.
- மீனாட்சி சுந்தரம்.
- பொன் முத்து செல்வம்.
- முத்து இளங்கோவன்.
- ரெஜின்.
- நிஷாந்த்.
- சோலை முகிலீஸ்வரன்.
- தருண்குமார்
- பாண்டி செல்வம்.
- ராஜா.
- சிக்கந்தர்.
- ராஜ்குமார்.
- பிரவீன்.
- செல்வா.
- முகிலன்.
- கருப்பசாமி.
மேலும் படிக்க: கட்டுக்கட்டாக பணத்துடன் கண்டெய்னர் லாரி.. துப்பாக்கியுடன் சுற்றி நின்ற போலீசார்.. சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு!