AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs ZIM W: 28 ஆண்டுகளில் முதல் முறை.. உலக சாதனை படைப்பாரா ஹர்மன்பிரீத் கவுர்..?

Harmanpreet Kaur Shatters Records: இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் 37 வயதில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனையாக திகழ்கிறார். வயதான வீராங்கனையாக சதம் அடித்தது மட்டுமின்றி, ஓப்பனிங் இல்லாத பிரிவிலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

IND W vs ZIM W: 28 ஆண்டுகளில் முதல் முறை.. உலக சாதனை படைப்பாரா ஹர்மன்பிரீத் கவுர்..?
ஹர்மன்பிரீத் கவுர்Image Source: GETTY
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Oct 2026 18:03 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் (Indian Womens Cricket Team) கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு பதிலாக, அனைத்து விதமாக கிரிக்கெட் வடிவத்திலும் ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக பிசிசிஐ (BCCI) நியமித்தது. இருப்பினும், இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் ஹர்மன்பிரீத் கவுர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் 91 ரன்கள் குவித்த ஹர்மன், அதே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வருடத்திற்கு பிறகு சர்வதேச சதத்தை அடித்தார். 37 வயதான ஹர்மன்பிரீத் கவுர், 104.13 ஸ்டிரைக் ரேட்டில் 15 பவுண்டரிகளை அடித்த தனது ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 328 என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது.

ALSO READ: ஹர்மன்பிரீத் கவுருக்கு எழுந்து நின்று கைதட்டிய ஸ்மிருதி மந்தனா! மைதானத்தில் நெகிழ்ச்சியான தருணம்!

ஹர்மன்பிரீத் கவுர் வரலாறு படைக்க வாய்ப்பு:

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 36 வயதைக் கடந்த பிறகு இரண்டு சதங்கள் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்பிரீத் ஆவார். ஹர்மன் கடந்த ஆண்டு ஜூலை 2025-ல் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் அடித்தார் (36 வயது, 136 நாட்கள்). மேலும், 35 வயதைக் கடந்த பிறகு 3 சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக, அலிசா ஹீலி மற்றும் டெபி ஹாக்லியின் சாதனையை ஹர்மன் சமன் செய்தார்.

ஒட்டுமொத்தமாக, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த நான்காவது வயதான வீராங்கனை ஹர்மன்பிரீத் ஆவார். மேலும், ஒரு முழு உறுப்பினர் நாட்டிற்கு எதிராக கடந்த 28 ஆண்டுகளில் இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வயதான வீராங்கனை என்ற ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார்.

சதம் அடித்த மிக வயதான இந்திய வீராங்கனை:

ஒருநாள் போட்டியில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீராங்கனை என்ற தனது சாதனையை ஹர்மன்பிரீத் முறியடித்தார். கடந்த 2025ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், ஹர்மன்பிரீத் கவுர் முன்னாள் இந்திய கேப்டனான மிதாலி ராஜின் (35 வயது, 287 நாட்கள்) சாதனையை முறியடித்திருந்தார். 37 வயதான ஹர்மன், ஒருநாள் போட்டிகளில் தனது எட்டாவது சதத்தின் மூலம், மிதாலியை (7) முந்தி, அதிக சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். கேப்டன் மந்தனா (14) மட்டுமே இவரை விட அதிக சதங்கள் அடித்துள்ளார்.

ALSO READ: கலக்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தல்!

இதற்கிடையில், தொடக்க ஆட்டக்காரர் அல்லாத வீராங்கனைகளில், மகளிர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த மிக வயதான வீராங்கனை என்ற தனது சாதனையையும் ஹர்மன்பிரீத் முறியடித்தார். இந்த சாதனையை இதற்கு முன்பு மிதாலி ராஜ் (35 வயது, 287 நாட்கள்) வைத்திருந்தார். இருப்பினும், ஹர்மன்பிரீத் உலக சாதனை படைத்த சில மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025ம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற 2025 மகளிர் உலகக் கோப்பையின் போது, ​​நியூசிலாந்தின் சோஃபி டிவைன் (36 வயது, 30 நாட்கள்) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

 

Follow Us