IND W vs ZIM W: தீப்தி ஷர்மா சதம்.. இந்திய மகளிர் அணியில் புதிய வரலாறு படைப்பு!
Deepti Sharma's Record Century: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீப்தி ஷர்மா 106* ரன்கள் குவித்து, ஆறாம் வரிசையில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார். ஹர்மன்பிரீத் கவுர் 126 ரன்கள் எடுத்தார். இந்தச் சதங்களின் உதவியுடன் இந்தியா 328 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வேயை வீழ்த்தி, 2-0 எனத் தொடரைக் கைப்பற்றியது.
ஜிம்பாப்வேக்கு (Zimbabwe Women) எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்தார். 86 பந்துகளில் தீப்தி அடித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தில், 15 பவுண்டரிகள் அடங்கும். அதாவது, தீப்தி 60 ரன்களை பவுண்டரிகள் மூலம் எடுத்தார். முன்னதாக, ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 121 பந்துகளில் 15 பவுண்டரிகளின் உதவியுடன் 126 ரன்கள் எடுத்து சதம் அடித்திருந்தார். இந்த சதத்தின் மூலம் தீப்தி சர்மா ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஷெஃபாலி வர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர். இதில், ராவல் 61 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய தஞ்சல் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து, ஆறாவது இடத்தில் களமிறங்கி சதம் அடித்த தீப்தி ஷர்மா ஒரு சாதனை படைத்தார்.
ALSO READ: ஹர்மன்பிரீத் கவுருக்கு எழுந்து நின்று கைதட்டிய ஸ்மிருதி மந்தனா! மைதானத்தில் நெகிழ்ச்சியான தருணம்!




அவ்வாறு செய்த முதல் இந்தியப் பெண்:
இந்திய மகளிர் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 6வது அல்லது அதற்கும் கீழான வரிசையில் பேட்டிங் செய்து சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார். மேலும், இதே வரிசையில் அதிக ரன்கள் (94) எடுத்த ரிச்சா கோஷின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய வெற்றி பெற்றதால், தொடரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத முன்னிலையில் உள்ளது. இது ஸ்மிருதி மந்தனா தனது கேப்டன்சியின் கீழ் பெறும் முதல் ஒருநாள் தொடர் வெற்றியாகும். இதற்கு முன்பு, மந்தனாவின் கேப்டன்சியின் கீழ், இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியானது வருகின்ற 2026 அக்டோபர் 28ம் தேதி நடைபெறுகிறது.
ALSO READ: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி..!
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மாவின் சதங்களின் உதவியுடன் இந்தியா 328 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. இலக்கை துரத்திய ஜிம்பாப்வே, 38 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஸ்ரீ சரணியின் பந்துவீச்சில், லாரன் ஃபிரி (6) ஷெஃபாலி வர்மாவிடம் கேட்ச் ஆனார். பின்னர், தொடக்க ஆட்டக்காரர்களான மோடெஸ்டர் முப்சிக்வா மற்றும் சிபோ முகேரி இரண்டாவது விக்கெட்டுக்கு அரைசத பார்ட்னர்ஷிப் (69) அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை சயாலி முறியடித்து, முகேரியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து, ஜிம்பாப்வே மகளிர் அணி 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.