கர்ப்பிணியிடம் தகராறு செய்த ரவுடி.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. அடுத்து நடந்த ஷாக்!
Rowdy Beaten to Death In Tuticorin | மது போதையில் கர்ப்பிணி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததன் காரணமாக ரவுடியை பொதுமக்கள் மிக கடுமையாக தாக்கிய நிலையில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரல், அக்டோபர் 26 : தூத்துக்குடியில் (Tuticorin) அரிவாளுடன் ரகலை செய்து, கர்ப்பிணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை பொதுமக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்புகளில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மது அருந்திவிட்டு தகராறு செய்த ரவுடி
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சேர்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மருமகன் தனுஷ்கோடி. பிரபல ரவுடியாக கருதப்படும் இவர், கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் அக்டோபர் 23, 2026 அன்று ஏரல் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே மது போதையில் நின்றுக்கொண்டு ரகலையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க : Tamil Nadu Weather Forecast: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!




அப்போது அந்த வழியாக கர்ப்பிணி ஒருவர் சென்றுள்ளார். அவரிடம், அரிவாளை காட்டி தனுஷ்கோடி அவதூராக பேசியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த பெண்ணையும் அவரது கணவரையும் கொலை செய்து விடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார்.
ரவுடியை கடுமையாக தாக்கிய பொதுமக்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கர்ப்பினி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், தனுஷ்கோடி அவரை பின்தொடர்ந்து சென்று அங்கேயும் தகராறு செய்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்த நிலையில், தனுஷ்கோடியை தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : கனமழை எச்சரிக்கை எதிரொலி: திண்டுக்கல் கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.