AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu News Live: உருவாகும் புயல்.. வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம்?

Tamil Nadu Latest News Live Updates in Tamil : இன்றைய கனமழையை பொறுத்தவரை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அக். 26 காலை புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி காலை தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்

C Murugadoss
C Murugadoss | Updated On: 26 Oct 2026 09:14 AM IST
Share
Tamil Nadu News Live: உருவாகும் புயல்.. வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம்?
தமிழ்நாடு செய்திகள் நேரலை

LIVE NEWS & UPDATES

  • 26 Oct 2026 09:15 AM (IST)

    Trump : இஸ்ரேல் மக்களுக்கு டிரம்ப் வேண்டுகோள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப், நெதன்யாகுவை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு இஸ்ரேல் மக்களை வலியுறுத்தினார். ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

  • 26 Oct 2026 09:14 AM (IST)

    Cyber Fraud: நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ்!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு வியாபாரி ஒருவர் தனது செல்போன் மற்றும் யூபிஐ (UPI) செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணப் பரிவர்த்தனை செய்து வந்த நிலையில், சைபர் திருடர்களின் நூதன வலையில் சிக்கி தனது கணக்கில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 26 Oct 2026 08:59 AM (IST)

    Actor Dhanush : மகளிர் நிர்வாகிகளுக்கு காமாட்சி விளக்கு

    சென்னை செம்மஞ்சேரியில்  ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்த நடிகர் தனுஷ், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மகளிர் நிர்வாகிகளுக்கு காமாட்சி விளக்கு பரிசளித்தார்

  • 26 Oct 2026 08:44 AM (IST)

    தகவல்களை வெளியிடவோ கூடாது – இந்திய தூதரகம்

    ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழிப்பது தொடர்பான நிகழ்வுகளை படம் பிடிப்பதையோ அல்லது அது குறித்த தகவல்களை வெளியிடவோ கூடாது – இந்திய தூதரகம்

  • 26 Oct 2026 08:37 AM (IST)

    Nagai Rains : நாகை மாவட்டத்துக்கு விடுமுறை

    கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • 26 Oct 2026 08:30 AM (IST)

    Saudi Arabia : தாக்குதலை வீடியோ எடுக்கக்கூடாது

    சவுதி மீதான தாக்குதலை வீடியோ எடுக்கக்கூடாது என இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கோரிக்கை

  • 26 Oct 2026 08:16 AM (IST)

    Ooty Rain : மலை ரயில் சேவை ரத்து

    தொடர் கனமழை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து

  • 26 Oct 2026 08:01 AM (IST)

    அரசு எச்சரிக்கை

    கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு எச்சரிக்கை

  • 26 Oct 2026 07:46 AM (IST)

    arnab cyclone : இன்று உருவாகும் புயல்

    நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மிக தீவிர அர்னாப் புயலாக இன்று உருவாகிறது.

  • 26 Oct 2026 07:29 AM (IST)

    TN Rains : நாளை எங்கெல்லாம் மழை

    நாளை (அக்.27) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

  • 26 Oct 2026 07:20 AM (IST)

    School Leave: தமிழகத்தில் இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 26 Oct 2026 07:15 AM (IST)

    Chennai Rains : ஆரஞ்சு அலெர்ட்

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்

  • 26 Oct 2026 07:14 AM (IST)

    Earthquake : மியான்மரில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

    தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, மியான்மரில் இன்று காலை 05:07:35 மணிக்கு 115 கி.மீ. ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

  • 26 Oct 2026 06:58 AM (IST)

    School Leave : பள்ளிகளுக்கு விடுமுறை

    திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டத்தில் தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று (அக்.26) இரண்டு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  • 26 Oct 2026 06:56 AM (IST)

    Rain Update : ஆரஞ்சு அலர்ட் 

    விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

  • 26 Oct 2026 06:56 AM (IST)

    Tamil Nadu Rains: அதிகனமழைக்கான ரெட் அலர்ட்

    இன்று (அக்.26) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு, 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக திண்டுக்கல், கோவை, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை நிலவரங்கள், தமிழ்நாடு அரசியல் கள செய்திகள், விளையாட்டு, உலகம், இந்தியா என அனைத்து வித செய்திகளையும் உடனுக்குடன் இங்கே பார்க்கலாம்

Published On - Oct 26,2026 6:55 AM

Follow Us