AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கனமழை எதிரொலி.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை!

School Leave Due To Heavy Rain: கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, நேற்றிரவே திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று 17 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனமழை எதிரொலி.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Oct 2026 07:19 AM IST

அக்டோபர், 26: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Tamil Nadu Weather Forecast: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை:

கள்ளக்குறிச்சியில் கனமழை காரணமாக 2 வட்டங்களில் உள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தியாகதுருகம் வட்டத்தில் உள்ள விருகாவூர் தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொரசக்குறிச்சி ஊராட்சி நடுநிலைப்பள்ளி, விருகாவூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சின்னசேலம் வட்டத்தில் உள்ள ஈரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள 26 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (அக்.26) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி – என்ன நடந்தது?

அதிகபட்ச மழை பதிவு:

தமிழகத்திலேயை அதிகபட்சமாக ராமநாதபுரம் பாம்பனில் 11.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, கோவை 6.2 செ.மீ, காரைக்காலில் 5.4 செ.மீ, புதுச்சேரி 4.8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow Us