AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி – என்ன நடந்தது?

Udhayanidhi Stalin Rice Allegations : நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியை சன்ன ரக அரிசி என்று கூட்டுறவு அங்காடியில் ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி – என்ன நடந்தது?
முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Oct 2026 07:28 AM IST

சென்னை, அக்டோபர் 25 : சன்ன ரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் (Ration Shop) மூலம் கிலோ ரூ.30 என்ற விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இலவசமாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியை சன்ன ரக அரிசி என்று கூட்டுறவு அங்காடியில் ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாடிக்கையாளர்கள் வாங்கிப்பார்த்து ரேசன் அரிசி என தெரிந்த பிறகு அதனை திருப்பி அளித்தனர்.

‘அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா?’

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.

இதையும் படிக்க : தொடர் கனமழை.. முடங்கிய ஊட்டி.. மலை ரயில் சேவை ரத்து- சுற்றுலாத் தலங்கள் மூடல்!

அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர். கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த எம்எல்ஏ

தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் – அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடல்

சன்ன ரக அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அக்டோபர் 17 அன்று இந்தத் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தனியார் அரிசி ஆலைகள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசியை, 201 கூட்டுறவு அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 5 கிலோ வீதம், கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கிடையே, சேலத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் ரேஷன் அரிசியே சன்ன ரக அரிசி எனக் கூறி விற்கப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us