திமுகவை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்! விஜய்க்கு நிர்வாக அனுபவமில்லை.. ஆனால்.. வைகோ கூறிய அந்த வார்த்தை!
Mdmk General Secretary Vaiko Latest Speech : திமுகவை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றும், முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை என்றாலும், அவர் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை என்றாலும், நேர்மையான ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் திமுகவை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள உணவகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை. இருந்தாலும் அவர் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழக அரசை எதிர்த்து முன்னதாக ஆண்ட கட்சியினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு கட்டத்தை விட்டு கீழே இறங்கி தரம் குறைந்த வகையிலும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
நேர்மையான ஆட்சி என்ற ஒற்ற இலக்கில் முதல்வர்
ஆனால், முதல்வர் விஜய் நேர்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பயணித்து வருகிறார். ஆட்சிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடையாது. இருந்தாலும் நேர்மையான ஆட்சியை முதல்வர் விஜய் நடத்தி வருகிறார். இதனை யாரும் மறுத்து பேச முடியாது. முந்தைய அரசுகளை எளிதாக அணுகிய ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் தற்போது வரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும். பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.
மேலும் படிக்க: ரூ.2,500 மகளிர் உரிமை தொகை வழங்க தாமதம் ஏன்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த விளக்கம்.. என்ன அது!




கடந்த ஆட்சி காலங்களில் கொலை- கொள்ளை சம்பவங்கள்
கடந்த காலங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கொள்ளை, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர்களான அண்ணா மற்றும் எம். ஜி. ஆர். ஆட்சி காலத்திலும் கொலை சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதே போல, மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆட்சி காலத்திலும் கொடூரமான கொலை சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
திமுகவை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்
திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். கடந்த திமுக ஆட்சி காலத்தில் கரும்பு தோட்டத்தில் சிமெண்ட் ரோடு போட்டு நடக்கவில்லையா. தமிழக மக்கள் தெளிவாக இருந்ததால் வேறு எந்த திராவிட கட்சிகளுக்கும் தங்களது வாக்குகளை செலுத்தாமல் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்க்கு மத்திய அரசிடம் இருந்து வந்த பாராட்டு.. ஏன்.. எதற்காக.. முழு விவரம்!