ரூ.2,500 மகளிர் உரிமை தொகை வழங்க தாமதம் ஏன்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த விளக்கம்.. என்ன அது!
Magalir Urimai Thogai : தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ. 2,500 வழங்குவதில் என்ன தாமதம் என்பதை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெளிவுபடுத்தி உள்ளார். இந்த திட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அந்த தொகை ரூ.2500- ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த தொகை எப்போது தங்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: பெண்களுக்கான ரூ.2500 உரிமைத் தொகையை முதல்வர் நிச்சயம் வழங்குவார். அதில், எந்த மாற்றமும் இல்லை. தவெக ஆட்சி 150 நாட்களை கடந்துள்ளது.
ரூ.2500 மகளிர் உரிமை தொகை வழங்கும் பணிகள்
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் வெகு சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். இதேபோல, ரூ. 2500 உரிமை தொகையும் வெகு விரைவில் மக்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், இறந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் நீக்கவும் செய்து தகுதியானவர்களுக்கு உரிமை தொகை வழங்க பணிகள் நடந்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தங்களுக்கான தொகை வராமல் வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு சென்று விடுவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: கொடைக்கானல் ஏரியில் நவீன கண்காணிப்பு இயந்திரம்.. குற்றச்செயலை தடுக்க சிறப்பு நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!




மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில முரண்பாடுகள்
அதனை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டதன் அடிப்படையில் மக்களுக்கான முழு பயம் சென்றடையவில்லை. இந்த தவறை சரி செய்து தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மக்கள் முழு பயன் அடையும் வகையில் பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ரூ.2500 மகளிர் உரிமை தொகை வழங்குதில் என்ன தாமதம்
இதன் காரணமாகவே, உயர்த்தப்பட்ட மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் அறிவித்த வாக்குறுதிகளை நிச்சயம் காப்பாற்றுவார். மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான வேலைகள் முடிந்த பின்னரே நாம் உறுதியாக தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டத்தின் கீழ், அறிவிக்கப்பட்ட ரூ.1,000 தொகையை தற்போதும் தவெக ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. சென்னையில் திமுக பிரமுகர் அதிரடி கைது.. பரபரப்பில் கட்சியினர்!