வெளுத்து வாங்கிய கனமழை.. வீட்டின் சுவர் விழுந்து தாய்- மகள் பரிதாப பலி.. விருதுநகரில் சோக சம்பவம்!
Virudhunagar Mother And Daughter Died : விருதுநகரில் பெய்த கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகள் ஆகியோர பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை அடித்து வெளுத்தது. இந்த மழையின் காரணமாக விருதுநகரில் சுவர் இடிந்து விழுந்து மாணவி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், மேட்டமலை கிராமத்தில் வசித்து வந்தவர் சோலையம்மாள். இவரது மகள் முத்துச்செல்வி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், விருதுநகர் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
கனமழையால் வீட்டி சுவர் இடிந்து விபத்து
அப்போது, திடீரென சோலையம்மாளின் வீட்டு சுவர் மழை நீரில் நனைந்து பொதும்பி திடீரென கீழே சாய்ந்தது. இதில், வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சோலையம்மாள் மற்றும் அவரது மகன் முத்துச்செல்வி ஆகியோர் மீது சுவர் விழுந்தது. அத்துடன், வீட்டின் மேற்கூறையும் அவர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதனால், இருவரும் தங்களை காப்பாற்றும்படி அலறல் சத்தம் போட்டனர். இவர்களது சத்தமும், வீட்டின் சுகர் இடிந்து கீழே விழுந்த சத்தமும் கேட்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தாய் மகள் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்.. முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர் கொலை.. தந்தை-மகன்கள் வெறிச்செயல்!




மீட்பு பணியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்- மகள்
ஆனால், அவர்களால் மீட்க முடியவில்லை. இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற மீட்பு பணியில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
பின்னர், இருவரது சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, சோலையம்மாள் உறவினர்கள் சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகரில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த கேரள மீன் வியாபாரி.. சிறை காவலர் உள்பட இருவரை தூக்கிய போலீஸ்.. கோவையில் பரபர சம்பவம்!