AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொடைக்கானல் ஏரியில் நவீன கண்காணிப்பு இயந்திரம்.. குற்றச்செயலை தடுக்க சிறப்பு நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!

Kodaikanal Lake Modern Camera Device : கொடைக்கானல் ஏரியில் குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை தடுக்கவும், கண்காணிக்கவும் நவீன கேமரா வசதி உடைய இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கொடைக்கானல் ஏரியில் நவீன கண்காணிப்பு இயந்திரம்.. குற்றச்செயலை தடுக்க சிறப்பு நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!
நவீன கேமரா ரோந்து இயந்திரம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Oct 2026 09:36 AM IST

தமிழகத்தில் சுற்றுலா தளம் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கொடைக்கானல் தான். அத்தகைய இடத்துக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம் ஆகும். பொது மக்கள் அதிக அளவு வந்து செல்லும் இந்த ஏரியை சுற்றி குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், குற்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நவீன கேமராவுடன் கூடிய மிதக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன இயந்திரமானது கொடைக்கானல் ஏரியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

சிறிய ரக படகு வடிவிலான இயந்திரம்

இதில், யாரேனும் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்தால் அவர்களை துரிதமாக மீட்கவும், ஏறியை சுத்தமாக வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய முயற்சியாக சிறிய ரக படகு வடிவிலான தூய்மைப்படுத்தும் இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் சோதனை ஓட்டம் நகராட்சி ஆணையர் அரவிந்த், நகர் நல அதிகாரி டாக்டர். அரவிந்த் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் பக்தர்கள் கவனத்துக்கு.. ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்.. நிர்வாகம் அறிவிப்பு!

ரூ.12 லட்சம் மதிப்பில் சிறிய ரக படகு

சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரத்தில் சிறிய ரக படகு போல மிதக்கும் வகையிலும் இரவு நேரங்களில் படம் பிடிக்கும் வகையிலும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல, ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தும் வகையிலும், தானாகவே இயங்கும் வகையிலும் இந்த நவீன இயந்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரி தண்ணீரில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றி ஏறிய சுத்தப்படுத்தும் பணியில் இந்த இயந்திரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்

இதை தொடர்ந்து, எதிர்வரும் நாட்களில் நட்சத்திர ஏரியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையிலும், குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையிலும், குப்பைகளை விரைந்து அகற்றி ஏரியை சுத்தமாக பேணுவதற்கும் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெளர்ணமி- வார விடுமுறை.. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Follow Us