AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Holiday Declared For 3 Districts Schools : வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து உள்ளனர் .

தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Oct 2026 07:48 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் நேற்று வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பொதுமக்களில் அன்றாட பணிகள் பாதித்துள்ளது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள்- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இதில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்  மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதே போல, திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் வந்தனா கார்க் பிறப்பித்துள்ளார். இதே போல, புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Weather Update: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. 25 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை – வானிலை ரிப்போர்ட்

24 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுப்பு

இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 23- ஆம் தேதி) 24 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்

இதனிடையே, தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதியில் புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த புயல் சின்னம் புயலான மாறும் பட்சத்தில் தமிழகத்துக்கு அதிக அளவிலான மழை மற்றும் புயல் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் வெளுக்கும் மழை.. இன்று வானிலை எப்படி?

Follow Us