Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Education

Education

தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 11 நாட்கள் காலாண்டு விடுமுறை.. தேர்வு அட்டவணையும் வெளியீடு!

Tamil Nadu School Quaterly Exam Holiday Schedule : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, காலாண்டு தேர்வுகள் முடிவடைந்ததும், மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டபம்ர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஹேப்பி.. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு

Nagapattinam Local Holiday : வேளாக்கண்ணி பேராலய திருவிழாயொட்டி, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என முன்று நாட்கள் விடுமுறை வருகிறது.

நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? கட் ஆஃப் விவரம் இதோ

NEET PG Exam Result 2025 : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்த நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் மாற்றம்.. எப்போது? வெளியான அதிகாரப்பூர்வு அறிவிப்பு

TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2025 நவம்பர் 15,16ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருவிழா நடைபெற உள்ள நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

TET தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

TN TET Exam 2025 : 2025 நவம்பர் 1,2ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு 2025 நவம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், 2025 செட்ம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், டெட் தேர்வு தேதியை மாற்ற கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளது.

+1 பொதுத்தேர்வு ரத்து.. 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

State Education Policy : தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என மாநில கல்விக் கொள்கைளியில் அறிவிக்கப்பட்டுள்ளது.  10,12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை தொடரும் எனவும் மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட் கட்டாயம்.. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!

Puducherry Government : புதுச்சேரியில் 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணிய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு, சுடிதார் மீது துப்பட்டா அணிந்து வந்த நிலையில், தற்போது சீருடையில் புதுச்சேரி அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஆகஸ்ட் 7ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!

Tenkasi Local Holiday : தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி, 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Tamil Nadu Public Exam Timetable 2025-26 : 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Teacher Recruitment Board Exam : முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 உள்ளிட்ட தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்துள்ளது. இத்தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில், அன்றைய தேதியில் குரூப் 4 தேர்வு நடைபெற இருப்பதல், முதுகலை ஆசிரியர் தேர்வை 2025 அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ல் விடுமுறை.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

Thoothukudi Local Holiday : தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலைநாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப்பெட்டியில் பெறப்படவில்லை.. 3 மாதங்களில் முடிவுகள் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்..

TNPSC Group 4 Answer Sheets: தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 2025 ஜூலை 13ஆம் தேதி வரை பெறப்பட்டதாகவும், அட்டைப்பெட்டியில் வந்தது என்ற செய்தி உண்மை இல்லை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 28ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு!

Virudhunagar Local Holiday : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, 2025 ஜூலை 28ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார் ஆட்சியர் சுகபுத்ரா.

TNPSC குரூப் 4 தேர்வு: ‘ஓஎம்ஆர் தாள்கள் பிரிக்கப்படவில்லை’ – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு!

TNPSC Group 4 Exam 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஜூலை 2025 குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் தாள்கள் தேர்வறைகளிலேயே பிரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியை மறுத்துள்ளது. அனைத்து விடைத்தாள்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு TNPSC கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு

Tamil Nadu Veterinary Courses Counseling: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவம் (BVSc & AH) மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு 2025 ஜூலை 22 அன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 660 இடங்கள் உள்ளன. தமிழக மாணவர்களுக்கு 597 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 2025 ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நேரடியாக நடைபெறும்.