AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய நடைமுறை..ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!

CBSE Plus 2 Exam: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் முழு ஆண்டு தேர்வு விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையில் திருத்தம் செய்யப்பட உள்ளன. வரும் தேர்வில் இருந்து நடைமுறைக்கு வருகிறது .

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய நடைமுறை..ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!
பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணியில் புதிய மாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 Feb 2026 10:55 AM IST

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் மாணவர்கள் பேப்பரில் எழுதும் விடைத் தாள்கள் ஆசிரியர்கள் மூலம் நேரடியாக பேனாக்கள் மூலம் திருத்தம் செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் பணியில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ) சார்பில் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆன்- ஸ்கிரீன் மார்க்கிங் எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதில், மாணவர்கள் வழக்கம்போல பேப்பரில் விடைகளை எழுத வேண்டும். அந்த விடைத் தாள்கள் அனைத்தும் பேனாக்கள் கொண்டு திருத்துவதை விடுத்து விட்டு, அனைத்து விடைத் தாள்களும் ஸ்கேன் செய்யப்பட உள்ளன.

டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி

இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட விடைத் தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விடைத் தாள்களை திருத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இதில், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும் விடைத் தாள்களை பார்த்து ஆசிரியர்கள் அதனை திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த புதிய நடைமுறையானது வருகிற முழு ஆண்டு தேர்வு முதல் அமலுக்கு வர உள்ளது.

மேலும் படிக்க: விஜயநகர காலத்து பொக்கிஷம் பறிமுதல்…4 பேரை தட்டி தூக்கிய போலீசார்…சிலை கடத்தல் பிரிவு அதிரடி நடவடிக்கை!

12-ஆம் வகுப்பு விடைத்தாள் மட்டுமே

இந்த புதிய நடைமுறையானது பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே திருத்தம் செய்யப்படும் எனவும், 10- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்வு விடைத் தாள்கள் பழைய முறையின்படியே, பேனாக்கள் கொண்டு திருத்தம் செய்யப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில் விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் நாளைக்குள்  (வெள்ளிக்கிழமை) தங்களது பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரிய, ஆசிரியர்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

இது தொடர்பாக சி பி எஸ் இ பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 12- ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரிய, ஆசிரியர்களுக்கு வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி ( சனிக்கிழமை) முதல் பிப்ரவரி 16-ஆம் தேதி ( திங்கள்கிழமை) வரை ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்கான பணி சுமையும் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு…அம்ரித் பாரத் ரயில்களில் புதிய வசதி…ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!

Follow Us