AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!

Vanathi Srinivasan : பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரூப் என்பவரை நியமித்து தேசிய தலைவர் நிதின் நபீன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!
வானதி சீனிவாசன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Aug 2026 19:12 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி என்பவர் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, இரு முறை அந்தப் பொறுப்பை வானதி சீனிவாசன் வகித்து வந்தார். அதன்படி, சுமார் 6 ஆண்டுகளாக தேசிய அளவில் பாஜக மகளிர் அணியை வானதி சீனிவாசன் வழி நடத்தி வந்தார். தற்போது, அந்த பொறுப்பில் வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது, வானதி சீனிவாசனுக்கு பதிலாக தேசிய மகளிர் அணியின் புதிய தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரூப் குமாரி சவுத்ரி என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

பாஜகவில் பல்வேறு உறுப்பினர்கள் மாற்றம்

இவர், இதற்கு முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அந்த மாநில அரசின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியில் கட்சி மற்றும் அமைப்பு ரீதியாக கட்சியினர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை தேசிய தலைவர் நிதின் நபீன் வெளியிட்டுள்ளார். இதில், பாரதியார் ஜனதா கட்சியின் தேசிய பொருளாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: காவிரி நீர் விவகாரம்… கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள்

இதுபோல, பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளராக கர்நாடகாவை சேர்ந்த பி.எல். சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பாஜக தேசிய செயலாளர் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, ராஜஸ்தான் முன்னாள் முதல் அமைச்சர் வசுந்தர ராஜே, குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, டாக்டர். மதுசந்தகர், நர்ஷாபாய்பென் நரேந்திர பாய் தோஷி, ரேகா வர்மா ஆகியோர் பாஜக தேசிய துணை தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதே பதவியில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்

இவர்களில் வசுந்தரராஜே மற்றும் ரேகா வர்மா ஆகியோர் அந்த பதவியில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய செயலாளர்களாக கவிதாபட்டிதார், பங்னான் கோன்யாக், சங்கீதா யாதவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது விசிக? தவெகவுடன் கூட்டணி தொடரும்.. தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

Follow Us