முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!
Legislative Assembly Protocol : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின் போது, சட்டமன்ர எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்திருக்க வேண்டுமா என்பது குறித்து சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்ததுடன், கேள்வியும் எழுப்பி இருந்தார். இதில், அறநிலையத்துறை அமைச்சர் திடீரென எழுந்து முதல்வர் வரும் பொழுது எதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த அவைக்கு பேரவை தலைவர் தான் தலைவர். பேரவை தலைவர் வரும்போது கட்சி வித்தியாசம் இன்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு மரமாகும்.
பேரவையில் அங்கும் இங்கும் சென்று வணக்கும் செலுத்தும் முதல்வர்
முதல் அமைச்சராக இருப்பவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் நேராக தங்கள் இருக்கைக்கு சென்று அங்கிருந்து வணக்கம் செலுத்தி விட்டு அமர்வது தான் மரபாகும். ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவைக்குள் நுழைந்து நடந்து சென்று அங்கும், இங்கும் திரும்பி வணக்கம் செலுத்தி விட்டு பின்னர் தனது இருக்கைக்கு சென்று அமருகிறார். இது, புதிய வழக்கமாக இருக்கிறது. அதே வகையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின் போது எழுந்து நிற்க வேண்டும் என்றால் இந்த அவைக்குள் எதிர்க் கட்சித் தலைவர் வரும் போதும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமா என்பதையும் பேரவை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் படிக்க: ஐபிஎல் ஸ்டேடியத்தில் போதைப்பொருளா?.. பேரவையில் உதயநிதி vs அமைச்சர் சரத் கடும் மோதல்..
எதிர்க்கட்சி தலைவர் வரும்போது எழுந்து நிற்பார்களா
இதனை ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்களா என விளக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு, சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்து பேசுகையில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேரவைக்கு வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், அவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது நமது பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகும்.
முதல்வர்- எதிர்க்கட்சி தலைவர் வரும் போது எழுந்துநிற்க தேவையில்லை
அந்த கண்ணியத்தை காப்பாற்ற வேண்டுமா இல்லையா என்பதை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு விட்டு விடுகிறேன். எனவே, யாரும் மரியாதை செலுத்தி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவரவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை தங்களது மனதுக்கு ஏற்ப கொடுப்பது அவர்களது விருப்பம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!