திருமணம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டமல்ல – நடிகை அஞ்சலி
Actress Anjali talks about marriage | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை அஞ்சலியின் ஆனந்தி என்ற கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் தற்போதும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நடிகை அவ்வபோது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மகுடம் மற்றும் ஏழு கடல் ஏழு மலை என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ஏழு கடல் ஏழு மலை படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை அஞ்சலி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமணம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டமல்ல:
அந்தப் பேட்டியில் நடிகை அஞ்சலி பேசியதாவது, நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சரியான நேரம் என்று எனக்குத் தோன்றும்போதே நான் திருமணம் செய்துகொள்வேன். திருமணம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையே மாறிவிடுகிறது; அவர் பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இவ்வளவு பொறுப்புகளும் சவால்களும் இருக்கும்போது, ஏன் அதே கேள்வியை என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் வைல்கார்ட் போட்டியாளர்கள் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“Marriage Is Not Just A One-Day Celebration…” – #Anjali
Actress #Anjali has opened up about the repeated questions she receives regarding marriage.
“Many people keep asking me, ‘When are you getting married?’ I will get married whenever I feel the time is right.
Marriage is… pic.twitter.com/Q7QQWzLWHt
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) October 2, 2026
Also Read… கேரளாவில் சூர்யாவின் சீன் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்

