AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SK27: சென்னையில் நடைபெறும் சிவகார்த்திகேயனின் SK27 பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!

SK27 Movie Shooting Update: தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் உருவாகிவருகிறது. இவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம்தான் SK27. இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

SK27: சென்னையில் நடைபெறும் சிவகார்த்திகேயனின் SK27 பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!
எஸ்கே27 திரைப்பட படப்பிடிப்பு அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Oct 2026 18:05 PM IST

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பேமஸான நடிகராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இணைந்த திரைப்படம் சேயோன் (Seyon). இப்படமானது SK26 என அறிவிக்கப்பட்டு பின் சேயோன் என டைட்டில் வைக்கப்பட்டது. இதை தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துவருகிறது. இந்த படத்தின் 3வது கட்ட ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு சிவகார்த்திகேயன் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் SK27. இதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நானியின் தி பாரடைஸ் படத்திலிருந்து வெளியானது அஞ்சானா அஞ்சானி பாடல் வீடியோ

சிவகார்த்திகேயனின் SK27 பட ஷூட்டிங் அப்டேட்:

சிவகார்த்திகேயன் மற்றும் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம்தான் SK27.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ECR-ல் உள்ள கோவளம் பீச் பகுதிகளில் நடைபெற்றுவருகிறதாம். ததற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணனின் SK27 படத்தின் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

சிவகார்த்திகேயனின் இந்த SK27 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேங்ஸ்டராக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: அஜித் சாரின் அந்த படத்தோட FDFS-அ  தியேட்டரில் பார்த்தேன் – ஜேசன் சஞ்சய்!

மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பளார் சாய் அப்யங்கர் இசையமைத்துவரும் நிலையில் படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறதாம். இப்படமானது வரும் 2027ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இப்படம் தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us