AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சினிமாவில் விஜய் – அஜித் இடையேயான போட்டி இப்படிதான் இருந்தது… ஜேசன் சஞ்சய் பேச்சு!

Jason Sanjay talks about Thalapathy Vijay and Thala Ajith competition | தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் இடையேயான சினிமா போட்டி குறித்து பேசியுள்ளார்.

சினிமாவில் விஜய் – அஜித் இடையேயான போட்டி இப்படிதான் இருந்தது… ஜேசன் சஞ்சய் பேச்சு!
விஜய் மற்றும் அஜித்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2026 16:54 PM IST

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்தே தொடர்ந்து நடிகர்களிடையே போட்டி என்பது இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த போட்டி சொந்த வாழ்க்கையில் இல்லை தாங்கள் நடிக்கும் படங்களிடையேதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 50 – 60 காலக்கட்டத்தில் நடிகர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் சினிமாவில் போட்டிப்போட்டு நடித்தனர். அவர்களைக் தொடர்ந்து தமிழ் சினிமாவில் போட்டிப் போட்டு படங்களை நடித்தவர்கள் நடிகர்கள் கமல் ஹாசன்  மற்றும் ரஜினிகாந்த். இவர்கள் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தொடர்ந்து இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் போட்டிப் போட்டு வெற்றியைப் பெற்று வந்தது. இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக உருவெடுத்தவர்கள் நடிகர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமார். இவர்களின் படங்கள் மட்டும் இன்றி இவர்களின் ரசிகர்களிடையேயும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமாவில் போட்டி என்பது நடிகர்களின் படங்களுக்கு இடையே இருந்தது தவிற அவர்களின் சொந்த வாழ்க்கையில் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் அஜித் மற்றும் விஜய் சந்தித்துக்கொண்டதே ஆகும். இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அஜித் – விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சினிமாவில் விஜய் – அஜித் இடையேயான போட்டி இப்படிதான் இருந்தது:

அந்தப் பேட்டியில் ஜேசன் சஞ்சய் பேசியதாவது, அது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. நீ இது போன்ற ஒரு படத்தை அளித்தால், நானும் அது போன்ற ஒரு படத்தை அளிப்பேன் என்பது இருவரையும் ஊக்கப்படுத்தியது. நீ 100 நாட்கள் ஓடிய வெற்றிகரமான படத்தை வழங்கினால், நானும் 100 நாட்கள் ஓடிய வெற்றிகரமான படத்தை வழங்குவேன் என்ற ரீதியிலான ஆரோக்கியமான போட்டி அது.

தற்போது தளபதி சினிமாவைத் தாண்டி வேறொரு தளத்தில் (அரசியல்) கவனம் செலுத்தி வருகிறார். அஜித் சாரும் வேறொரு விஷயத்தில் (பந்தயப் போட்டிகள்) கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்குப் போட்டியிடுவதற்கான நேரமோ அல்லது வாழ்நாள் முழுவதும் அத்தகைய போட்டியைத் தொடர வேண்டிய அவசியமோ இல்லை. எனவே, அவர்கள் இருவரும் இணைந்தனர். இது ஒரு ஆரோக்கியமான போட்டி. எதிர்காலத்திலும் இத்தகைய போட்டிகளை நாம் காண வேண்டும் என்றும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ajith Kumar: என்னது மல்டி-ஸ்டார் படமா?.. அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணையும் நடிகர்கள் இவர்களா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Nivin Pauly: எதாவது பிரச்சன வரும்போது.. மோகன்லால் சார் தைரியம் கொடுப்பாரு – நிவின் பாலி பேச்சு!

Follow Us