AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேனேஜராக ஜாவீத்தை டார்கெட் செய்த லக்ஷ்மி பிரியா.. அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் லக்ஷ்மி பிரியா!

Bigg Boss 10 Todays Promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 26 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் இன்று (02/10/2026) வெளியான 2வது புரோமோவில் ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுவது போல வெளியாகியுள்ளது.

மேனேஜராக ஜாவீத்தை டார்கெட் செய்த லக்ஷ்மி பிரியா.. அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் லக்ஷ்மி பிரியா!
லட்சுமி பிரியா மற்றும் ஜாவீத் பிக் பாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2026 16:03 PM IST

தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவியில் சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 26 நாட்களான நிலையில், விறுவிறுப்பாக இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பிபி ஹோட்டல் டாஸ்க் (BB Hotel Task) நடைபெற்றுவரும் நிலையில், இந்த டாஸ்கிங் தலைவராக லக்ஷ்மி பிரியா இருந்துவருகிறார்.

அந்த விதத்தில் இவர் மற்ற போட்டியாளர்களை ஆர்டர் செய்யும் விதத்தில் அவரின் மீது மற்ற போட்டியாளர்கள் கடுப்பில் உள்ளனர். அந்த விதத்தில் கிட்சன் டீமில் இருந்த தன்யாவை இவர் டார்கெட் செய்து பேசியிருந்த நிலையில், தற்போது ஜாவீத்தை ட்ரிக்கர் செய்யும் விதத்தில் லக்ஷ்மி பிரியா பேசிய புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆக்ஷன் காதல் கதையில்… அசோக் செல்வனின் அன்பில் அவன் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 26வது நாளின் 2வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் கிச்சன் டீமில் ஜாவித் மற்றும் தன்யா இருந்துவரும் நிலையில், மற்ற போட்டியாளர்களுக்கு சமையல் செய்து வருகின்றனர். இதனால் நேற்று நடந்த டாஸ்கில் தன்யாவை மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்து பேசிய நிலையில், அவர் கண்ணீர் விட்டு அளித்திருந்தார்.

இதையும் படிங்க: சிக்மா பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்காக திரையரங்கு வந்த சங்கீதா – திவ்யா ஷாஷா – வைரலாகும் வீடியோ!

அதை போல இன்று (02/10/2026) வெளியான புரோமோவில் வெளியான புரோமோவில் ஜாவித் கிட்சன் டீமில் இருக்கும் நிலையில், அவரை டார்கெட் செய்து லக்ஷ்மி பிரியா பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த ஜாவித் லக்ஷ்மி பிரியாவை கோபத்தில் திட்டியுள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

எவிக்ஷன் பாஸை வாங்கப்போகும் நபர்கள் யார்:

இந்த 4வது வாரத்தில் 3 எவிக்ஷன் ப்ரீ பாஸ் கொடுக்கப்படவுள்ளது. இந்த டாஸ்கில் லக்ஷ்மி பிரியா இந்த பாஸை பெறுவார் என கூறப்படுகிறது. மற்ற மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரத்தில் வெளியேறும் இரு போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும் தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us