AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Anbil Avan: ஆக்ஷன் காதல் கதையில்… அசோக் செல்வனின் அன்பில் அவன் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Anbil Avan Movie Review: நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம்தான் அன்பில் அவன். இப்படமானது இன்று (02/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கிறது. தற்போது இப்படத்தின் முழு விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Anbil Avan: ஆக்ஷன் காதல் கதையில்… அசோக் செல்வனின் அன்பில் அவன் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
அன்பில் அவன் திரைப்பட விமர்சனங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2026 13:30 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அசோக் செல்வன் (Ashok Selvan). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் பல படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக மணிரத்தினம் (Mani Ratnam) இயக்கத்தில் தக் லைஃப் (Thug Life) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அந்த அளவுக்கு வரவேற்கப்படவில்லை. இப்படத்திற்கு பிறகு இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம்தான் அன்பில் அவன் (Anbil Avan). அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் (R. Kaarthikeyan) இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக தமிழ் நடிகை ப்ரீத்தி முகுந்தனும் (Preity Mukhundhan) இணைந்து நடித்துள்ளார்.

அதிரடி மற்றும் ஆக்ஷன் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த இப்படம் இன்று (02/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் விமர்சனங்கள் குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில்.. ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் விமர்சனங்கள் :

அசோக் செல்வன் ஹீரோவாக 2 ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ள்ள படம்தன் அன்பில் அவன். இந்த படமானது இன்று (02/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் பாணியில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

அன்பில் அவன் படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கு:

இப்படத்தில் அசோக் செல்வன் ஆக்ஷன் மற்றும் காதல் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்த நடித்துள்ள நிலையில், இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் சிறப்பாகவே அமைந்துள்ளது. ஒரு அட்டகாசமான நடிப்பை இவர்கள் இருவருமே வெளிப்படுத்தியுள்ளனர் என கூறலாம்.

இதையும் படிங்க: அந்தப் படத்தில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது – நடிகை அமலா பால்

அன்பில் அவன் படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா ?:

இப்படத்தில் இவர்களின் ஜோடியாக காதல் காட்சிகளையும் உணர்ச்சிப் பெருக்கையும் வெளிப்படுத்துவது முதல், வில்லன்களை கைகளாலும் புத்திசாலித்தனத்தாலும் எதிர்த்துப் போராடுவது வரை, அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு முழு நீதி செய்துள்ளனர். மேலும் அடுத்து உங்களைக் கட்டிப்போடப்போவது ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்தான்.

இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி அமைப்பு, இது படத்திற்கு மேலும் புத்துணர்ச்சியை சேர்க்கிறது. வண்ணமயமான தருணங்கள் போல இப்படம் அமைந்திருக்கிறது. காதல் மற்றும் ஆக்ஷன் பாணியை விரும்புபவர்கள் நிச்சயம் இப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us