Ajith Kumar: என்னது மல்டி-ஸ்டார் படமா?.. அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணையும் நடிகர்கள் இவர்களா?
Dare Devil Movie: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமானது மல்டி ஸ்டார் படமாக உருவாக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமாக கிட்டத்தட்ட 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran)இயக்கியிருந்தார். இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. அஜித் குமாரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலியே அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் இதுதான் முதலிடம். அஜித் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த படமாக இந்த குட் பேட் அக்லி தான். இந்த படத்திற்கு பின் மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகும் படம் டேர் டெவில் (Dare Devil)
இதை அஜித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகிவருகிறது. அந்த விதத்தில் இந்த படத்தில் பல்வேறு நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ரவுண்டுகட்டி அடிக்கும் போட்டியாளர்கள்.. திணறும் தான்யா – வைரலாகும் புரோமோ!
மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகிறதா அஜித்தின் டேர் டெவில் :
இந்த டேர் டெவில் திரைப்படத்தில் அஜித் குமார் மொத்தம் இரண்டுவிதமான கேரக்டரில் நடிக்கிறாராம். நேர்மறையான வேடத்திலும், மக்காத்தா படத்தை போல கூலான வேடத்திலும் நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படமானது மல்டி ஸ்டார் படமாக உருவாக்கப்படவுள்ளதாம். இப்படமானது பல முன்னணி நடிகர்கள் எதிர்மறைப் பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்… டோரதி படம் குறித்து பாராட்டிய பேசிய நடிகர் சூர்யா!
இப்படம் ஜெயிலர் படத்தைப் போல இருக்கும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதற்கு மலையாள நடிகர் உன்னி முகுந்தனிடம் பேச்சுவார்த்தைகள் நடக்கிறதாம். மேலும் மற்றொரு வேடத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதும்.
அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் நடிகர்கள் குறித்து வைரலாகும் பதிவு:
As Per VP,
– In #Daredevil, #AjithKumar is going to play a character with two distinct shades. One side will have a positive nature, while the other is expected to explore a stylish and menacing negative shade, carrying the cool, swag filled vibe of #Mankatha.
– The film is… pic.twitter.com/TEqngpmgRD
— Movie Tamil (@_MovieTamil) October 1, 2026
இந்த டேர் டெவில் படத்தில் அஜித் குமார் ரெட்டை வேடத்தில் நடிக்கும் நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். இந்த படத்தை ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் நிலையில், எந்த நடிகை நடிக்கிறார் என்பது உறுதியாகவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.