Shivarajkumar: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
Shivarajkumar About Vishwanath & Sons Movie: கன்னட சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவராஜ்குமார். இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டிவருகிறார். அண்மையில் தனது புதிய படத்தின் புரோமோஷன் ஒன்றில் பேசிய இவர், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பாராட்டி பேசியுள்ளார்.
தென்னிந்திய மொழி சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் அறியப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார் (Shivarajkumar). கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) ஜெயிலர் (Jailer) படத்தின் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவரின் நடிப்பில் தமிழில் “பிக்காசோ” (Picasso) என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் கன்னட மொழியில் வெளியாகி தயாராகியுள்ள புதிய படம்தான் பெயில் (Bail).
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகியுள்ள இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார், சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்த சிவராஜ்குமார்:
அந்த பேட்டியில் பேசியிருந்த சிவக்குமார், “நான் சமீபத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ஒரு மணி நேரம் எனக்குத் தூக்கம் வரவில்லை. அது என் பெற்றோரை, என் குடும்பத்தை எனக்கு நியாபகப்படுத்தியது.
இதையும் படிங்க: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
நான் அங்கே அப்படியே படுத்துக்கொண்டு, அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், அப்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. அது சில உணர்ச்சிகள் என்று நினைக்கிறேன். நானும் என்றாவது ஒரு நாள் அதுபோல ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்” என அதில் விளக்கமாக பேசியிருந்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து சிவராஜ்குமார் பேசியது தொடர்பாக பரவும் வீடியோ:
#Shivarajkumar: I watched #VishwanathAndSons recently. When I saw the film, I couldn’t sleep for an hour. It reminded me of my parents and my family. I was lying there, thinking about it, and I was in tears. I think some emotions.. I also wish to do a film like that someday.…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 26, 2026
சிவராஜ்குமார் தமிழில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இதை அவரே உறுதி செய்திருந்தார். இதற்கு பின் அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் உருவகம் பிக்காசோ என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.