AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணி பட ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Abishan Jeevinth New Movie: தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மலம் பிரபலமானவர் அபிஷன் ஜீவிந்த், இயக்குநராக நுழைந்த இவர், தற்போது நடிகராக கலக்கிவருகிறார். சிவராஜ் குமாருடன் இவர் புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணி பட ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!
அபிஷன் ஜீவிந்த் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Aug 2026 19:50 PM IST

கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist family) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்து, அந்த படத்திலே சிறு வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இவர் இயக்கிய முதல் படமானது சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) படத்துடன் வெளியாகியும், பேமிலி ஆடியன்ஸை கவர்ந்து வெற்றிபெற்றது. இந்த படத்திற்கு பின் இவர் நடிகராகவும் நடிக்க ஆர்வம் கொண்ட நிலையில், அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்கத்தில், வித் லவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் (Shiva Rajkumar) முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் (Gowtham Sivaraman) இயக்க, டிராமா கம்பெனி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், இன்றுடன் (29/08/2026) முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவையும் படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: BKU மற்றும் இருமுடி பட வெற்றி.. PR01 படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய மமிதா பைஜூ மற்றும் ஸ்வாசிகா!

சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புது பட ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:

அபிஷன் ஜீவிந்தின் புது பட அப்டேட்:

சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந் இணைந்து நடிக்கும் புது படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தற்போது தற்காலிகமாக சிவராஜ்குமார் X அபிஷன் ஜீவிந்த் என்றே அழைக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டூரிஸ்ட் பேமிலி படம் மூலம் பிரபலமான யோகலட்சுமி நடித்துள்ளார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில், அபிஷன் ஜீவிந்தின் தந்தை வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ஓடிடி அப்டேட் வெளியானது – வைரலாகும் தகவல்

இப்படமானது காதல், குடும்பம் மற்றும் நட்பு போன்ற சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிக் பாஸ் சீசன் 9ன் மூலம் பிரபலமான கானா வினோத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை 2026ம் ஆண்டு தீபாவளிக்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதை முன்னிட்டு விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போன்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us