இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தின் பூஜை போட்டோஸ்
Abishan Jeevinth second film pooja photos is viral on social media | தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் அபிஷன் ஜீவிந்த். இவரது நடிப்பில் இரண்டாவதாக உருவாக உள்ள படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நாயகன் மற்றும் நாயகியாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் அவர் படங்களை இயக்காமல் மாறாக நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி தமிழ் சினிமாவில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆன படம் வித் லவ். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் படங்களை இயக்கும் பணிகளில் ஈடுவபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவதாகவும் நாயகனாக நடிக்கும் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.




இணையத்தில் வைரலாகும் அபிஷனின் 2-வது படத்தின் பூஜை போட்டோஸ்:
அதன்படி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இரண்டாவது முறையாக நாயகனாக நடிக்கும் படத்தை அறிகும இயக்குநர் கௌதம் ஸ்ரீராமன் எழுதி இயக்க உள்ளார். இந்தப் படத்தில் கன்னட சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷிவானி நாகராம் மற்றும் யோகலட்சுமி இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று நடிகர் அபிஷன் ஜீவிந்த் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா? வைரலாகும் புது தகவல்
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#DramaCompanyProductionNo1 ❤️✨
A new dream begins.
A new journey unfolds.With the blessings of the almighty and the warmth of our loved ones, our maiden venture officially launched with an auspicious pooja ceremony 🙏🎬
Extremely excited to collaborate with this wonderful… pic.twitter.com/0T78pPSr5Y
— Drama Company (@dramacompany) June 1, 2026
Also Read… பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் நடிகராக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.. கதாநாயகி இவர்தான்!