AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா? வைரலாகும் புது தகவல்

Ak 64 Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக அஜித் குமார் 64 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிறிது காலம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா? வைரலாகும் புது தகவல்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2026 18:19 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. அதன்படி 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படம் மற்றும் ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே விமர்ச்ன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படங்களை தொடர்ந்து தனது கார் ரேசிங்கில் சுமார் 1 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் தனது 64-வது படத்திற்காக இணைய உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் பணிகள் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா?

அதன்படி தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பார் என்ற வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாவதாக இருந்த ‘AK 64’ திரைப்படம் சற்று தாமதமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… மூன்றாவது வாரத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கருப்பு – வெற்றியைக் கொண்டாடும் படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… H Vinoth: ஜன நாயகன் எப்போ சார் வரும்? – இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!

Follow Us