மூன்றாவது வாரத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கருப்பு – வெற்றியைக் கொண்டாடும் படக்குழு
Suriyas Karuppu movie entered successfully in the 3rd week | நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் கருப்பு படம் இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது மூன்றாவது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, சுவாசிகா, ஷிவதா, நட்டி சுப்ரமணியம், மன்சூர் அலிகான், சுப்ரீத் ரெட்டி, வேலா ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியம், நமோ நாராயணா, கராத்தே கார்த்தி, தீபா, ராமசந்திரன் துரைராஜ், லொள்ளு சபா மாறன், ஜாஃபர் சாதிக், உன்னிமயா பிரசாத், புதுகை பூபாலம், சித்ரா லக்ஷ்மனன், வேட்டை முத்து குமரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் தமிழ் சினிமாவில் உருவாகி இருந்தாலும் உலக அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




மூன்றாவது வாரத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கருப்பு:
அதன்படி படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் படம் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படக்குழு இதனை கொண்டாடும் விதமாக போஸ்டர்களை வெளியிட்டு உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Blast: அர்ஜுனின் பிளாஸ்ட் படம் பிளாஸ்ட் ஆச்சா? இல்ல புஸ்ஸுன்னு போச்சா? விமர்சனங்கள் இதோ!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Karuppu – Blockbuster 3rd week in theatres worldwide 💥
The ONE @Suriya_offl‘s mega blockbuster, on the big screens now!
A feast by @RJ_Balaji and team.
A @dop_gkvishnu Visuals.
A @SaiAbhyankkar Musical.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers @prabhu_sr #Indrans… pic.twitter.com/R2Gfir0wNn— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 29, 2026