தமிழகத்தின் அன்பு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் – விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு
Actor Vishal thanks to CM Vijay | கோலிவுட் சினிமாவில் புதிதாக வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்களுக்கு திரையரங்குகளில் காலை 9 மணி முதல் மொத்தம் 5 காட்சிகளை வெளியிட தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அறிவிப்பை வெளியிட்டதற்கு நடிகர் விஷால் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் தளபதி விஜய். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனது நிர்வாகிகளை வைத்து வேலை செய்து வந்தார். சினிமாவில் நடிகனாக வந்த தன்னை உச்சத்தில் அமர வைத்த மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கியதாக கூறிய அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற போது ஒரு வாய்ப்பு கொடுங்க என்றுதான் கேட்டு வந்தார். அப்படி தளபதி விஜய் கேட்ட வாய்ப்பை மக்களும் அளித்தனர். மொத்தம் 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை வென்று பெரும்பான்மையான கட்சியாக மாறியது தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம்.
ஆனால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான தொகுதிகள் இல்லாததால் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தார் தளபதி விஜய். அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கோலிவுட் சினிமாவிற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த திட்டத்தை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அன்பு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்:
திரைத்துறையின் தற்போதைய நிலையைப் புரிந்துகொண்டு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான முதல் 7 நாட்களுக்கு அனைத்துப் படங்களுக்கும் தினமும் ஐந்து காட்சிகளைச் செயல்படுத்திய, மக்களின் அன்புக்குரியவரும், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவருமான, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கலே அவர்களுக்கு நன்றி. அனைத்துத் துறைகளிலும் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணத்தையும் முற்போக்கான வளர்ச்சியையும் கொண்டுவரும் மேலும் பல அரசாணைகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு பெரிய வாழ்த்து என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… கார்த்தியின் 30-வது படத்தை தயாரிக்கும் சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் – வைரலாகும் அப்டேட்
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you dear @CMOTamilnadu #Vijay avargale, darling of the masses and the most prolific actor turned politician for understanding the current situation in the film industry and implementing five shows a day for all films for the first 7 days of the film s theatrical release.…
— Vishal (@VishalKOfficial) May 26, 2026
Also Read… விறுவிறுப்பாக நடைப்பெறும் ஃபகத் பாசில் – பிரேம் குமார் பட ஷூட்டிங்