AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kamal Haasan: ‘கல்கி 2’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!

Kamal Haasan Joins Kalki 2 Shoot: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் தெலுங்கில் உருவாகிவரும் கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் ஏற்கனவே இணைந்திருந்தார். அந்த வகையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Kamal Haasan: ‘கல்கி 2’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!
கல்கி 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 May 2026 07:45 AM IST

ரசிகர்களால் அன்போடு உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் தமிழ் சினிமவை கடந்து பல்வேறு மொழி படங்களில் நாயகனாகவும், முக்கியமான வேடங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் கடந்த 2024ம் ஆண்டில் தெலுங்கு மொழியை மையமாகக்கொண்டு இயக்கப்பட்டிருந்த கல்கி2898ஏடி (Kalki2829AD) என்ற படத்தில் மெயின் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படமானது பிரபாஸ் (Prabhas), அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), தீபிகா படுகோன் (Deepika Padukone) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் கல்கி பாகம் 2 (Kalki 2) தற்போது உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் இணைந்து நடிக்க தொடங்கிவிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் இதன் ஷூட்டிங்கில் இணைந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் இயக்குநர் நாக் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர்களுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தளபதிக்கு விசில் போடே.. ஜன நாயகன் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்?

கல்கி 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் மற்றும் நாக் அஷ்வின் இருக்கும் புகைப்பட பதிவு:

தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்றிருந்த திரைப்படம் கல்கி 2. இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் ஷோபனா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது புராண கதை மற்றும் மார்டன் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. தெலுங்கு மொழியில் இயக்கப்பட்டிருந்த இப்படம், பான் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்தது. இப்படமும் உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் டைம் லூப்பில் சிக்கும் ஹீரோ.. மலையாளத்தில் இப்படி ஒரு படமா.. இதை மிஸ் பண்ணிராதீங்க!

அந்த வகையில் தற்போது கல்கி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இன்னும் இப்படத்தில் பிரபாஸ் இணையவில்லை, மேலும் தீபிகா படுகோன் இதிலிருந்து விலகிவிட்ட நிலையில், சாய் பல்லவி அல்லது ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us