AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா சார் இந்தப் பிரம்மாண்ட வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் முழுமையாகத் தகுதியானவர் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

Music Director Devi Sri Prasad Praised Suriyas Karuppu Movie: தமிழ் சினிமாவில் வெளியாகி உலகம் முழுவதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா சார் இந்தப் பிரம்மாண்ட வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் முழுமையாகத் தகுதியானவர் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2026 18:32 PM IST

கடந்த 1999-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தேவி. சாமிப் படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களுக்கு இசையமைத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான இனிது இனிது காதல் இனிது என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மட்டும் இன்றி கன்னடா, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர்கள் விஜய், சூர்யா, ரவி மோகன், விக்ரம், தனுஷ், கமல் ஹாசன், கார்த்தி, அஜித் குமார் மற்றும் விஷால் என பலரின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இறுதியாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்திற்கு இசையமைத்து உள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த நிலையில் இவர் தற்போது நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தை பாராட்டி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தப் பிரம்மாண்ட வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் தகுதியானவர்:

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புள்ள சூர்யா சார், உங்களின் பேரார்வம், கடின உழைப்பு மற்றும் அபாரமான நடிப்புக்காக இந்த மாபெரும் வெற்றிக்கு நீங்கள் முழுமையாகத் தகுதியானவர். இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி சாரின் ஒரு புத்தம் புதிய கருத்து. படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து வெற்றி பெறவும், இன்னும் பல மைல்கற்களை அடையவும் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Yogi Babu: ஒரே படத்தில் 10 வேடம்.. யோகி பாபு நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு இதோ!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜயை போல ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததில்லை.. ஷூட்டிங்கில் எப்போதுமே அப்படிதான் – நடிகை மீனாட்சி சவுத்ரி பேச்சு!

Follow Us