AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கவினுக்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

Kavin Raj & Sanjana Krishnamoorthy Team Up: தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை நடிகராக இருந்து, சினிமாவிலும் பிரபல நடிகராக இருந்துவருபவர் கவின். இவர் தொடர்ந்து புதிய படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில், கவினுக்கு ஜோடியாக லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கவுள்ளாராம்.

கவினுக்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?
கவின் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்திImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 May 2026 19:03 PM IST

கோலிவுட் சினிமாவில் இளம் நடிகராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் நடிகர் கவின் ராஜ் (Kavin raj). இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடித்துவந்த நிலையில், பின் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subburaj) பீட்சா படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்திற்கு பிறகு சீரியலில் தொடர்ந்து நடித்த இவருக்கு, சினிமாவின் மீதே அதிக ஆர்வம் இருந்தது. அந்த வகையில் இதுவரையில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 6 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. இறுதியாக இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) தயாரிப்பில் வெளியான மாஸ்க் (Mask) என்ற படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படத்தை அடுத்ததாக புதிய படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.

இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படமானத் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில் கவின் நடிக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) நடித்துவருகிறாராம். இவர் லப்பர் பந்து (Lubber Pandhu) மற்றும் தக் லைஃப் (Thug Life) போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

இதையும் படிங்க: இளையராஜாவுடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு.. தனது புதிய படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!

கவினுக்கு ஜோடியாக படத்தில் நடிக்கும் லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா:

நடிகர் கவின் தொடர்ந்து புதிய படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில், கிட்டத்தட்ட 3 படங்களின் ஷூட்டிங் பூஜையும் ஒரே சமயத்தில் நடைபெற்றிருந்தது. அந்த வகையில் கவின் தற்போது தண்டட்டி பட இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சர்தார் 2 படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தில்தான், நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகசி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துவருகிறார். இப்படமானது கிராமத்து எமோஷனல் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம்.

இதையும் படிங்க: வெறும் 8 நாட்களில்.. தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது சூர்யாவின் கருப்பு திரைப்படம்!

தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் கவின் மற்றும் சஞ்சனா நடிக்கும் ம்படம் குறித்த பதிவு:

இப்படமானது முழுக்க கிராமத்து கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், கவினின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவந்தது. அந்த வகையில் தற்போது அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங்கில் கவின் பிசியாக இருக்கிறார். இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் முதல் திரைப்படமாக நயன்தாராவுடன் நடித்த ஹாய் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us