AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kavin: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!

Kavin Comments On Nayanthara: தமிழில் சினிமாவில் தற்போது இளம் நடிகராக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருபவர் கவின். இவர் நயன்தாராவுடன் ஜோடியாக ஹாய் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் அப்படத்தில் நயன்தாராவுடன் பணியாற்றிய விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி பார்க்கலாம்.

Kavin: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!
நயன்தாரா மற்றும் கவின்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Apr 2026 15:09 PM IST

நடிகர் கவின் (Kavin) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்க் (Mask). இந்த படத்தை வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரித்திருந்த நிலையில், முக்கிய வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா (Andrea) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அந்த விதத்தில் இந்த படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 3 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக கவின் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் நயன்தாராவிற்கு (Nayanthara) ஜோடியாக இவர் நடித்துவரும் படம்தான் “ஹாய்” (Hi). இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு இடவன் (Vishnu Edavan) இயக்க, ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது.

இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் சமீபத்தில் பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கவின், நடிகை நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மம்முட்டி – மோகன்லால் நடிப்பில் பேட்ரியாட் படத்தின் நியூ ரிலீஸ் எப்போது… அப்டேட் இதோ

நயன்தாரா குறித்து கவின் பேசிய விஷயம்:

அந்த பத்திரிகை நேர்காணலில் பேசியிருந்த கவின், “ரஜினிகாந்த் சார், விஜய் சாரின் வெர்க்கிங் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கிறது” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ஹாய் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகை நயன்தாராவின் முன்னணி நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம்தான் ஹாய். இதை அறிமுக இயக்குநர் விஷ்ணு இடவன் இயக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துவருகிறார். இந்த படமானது பெல் குட் திரைப்படமாக சாதாரண லவ் ஸ்டோரியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இதை வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக்

அதே ஏப்ரல் மாதத்தில் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாராகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகும் நிலையில், ஹாய் படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே இடைப்பட்ட நாளில் ஹாய் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து படக்குழு இன்னும் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us