Nayanthara: ஹேப்பி பர்த்டே நயன்தாரா.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ஹாய்’ படக்குழு!
Nayanthara 41st Birthday: தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில்ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா. அந்த வகையில் தமிழில் இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் ஹாய். இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நடிகை நயன்தாரா (Nayanthara) தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் எந்த திரைப்படங்களும் தமிழில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இன்று 2025 நவம்பர் 18ம் தேதியில் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் தமிழில் வித்தியாசமான கதையில் உருவாகிவரும் படம்தான் ஹாய் (Hi). இப்படத்தில் நடிகர் கவினுடன் (Kavin) இணைந்து நடித்துவருகிறார். இன்று நயன்தாராவின் பிறந்தநாளை ஸ்பெஷலாக இப்படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.




இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கருப்பு படம் குறித்து வெளியான முக்கிய தகவல்
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ஹாய் படக்குழு:
Happy Birthday to the ever-inspiring and graceful #Nayanthara! Wishing you a year filled with love, success, and happiness.#HiMovie @Kavin_m_0431 @VishnuEdavan1 @JenMartinmusic @philoedit @zeestudiossouth @Rowdy_Pictures #UmeshKrBansal @girishjohar #RaveenaDeshpaande… pic.twitter.com/VtKPNbeIo3
— Seven Screen Studio (@7screenstudio) November 18, 2025
நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் திரைப்படம் :
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம்தான் ஹாய். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது ஒரு பெண்ணியம் சார்ந்த கதைக்களத்தில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பாதியளவு நிறைவடைந்த நிலையில், இன்னும் 2 ஷெட்யூல் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தய் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க: விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் என்னை கடினமாக உழைக்க வைக்கிறது- சாய் அபயங்கர்!
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் கைவசம் உள்ள படங்கள் :
நடிகை நயன்தாராவின் நடிப்பில் டியர் ஸ்டூடண்ட், டாக்சிக், மண்ணாங்கட்டி, பட்ரியோ, மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, ஹாய் மற்றும் நடிகர் சிரஞ்சீவியுடன் ஒரு படம் என பல படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் என்.பி.கே.111 படத்தில் ராணி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது.