விஜய் சாருக்கு அந்தமாதிரி கதையில் படம் எடுக்கவேண்டும் என ஆசை- நினைத்ததை சாதித்த ஹெச்.வினோத்!
H. Vinoth About Vijay: தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துவருபவர் இயக்குநர் ஹெச். வினோத். இவரின் இயக்கத்தில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் உருவாகியுள்ள நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் விஜயை வைத்து எப்படிப்பட்ட படம் எடுக்கவிடும் என ஆசை பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான “சதுரங்க வேட்டை” (Sathuranga Vettai) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச். வினோத் (H. Vinoth). இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் குமாருடன் (Ajith Kumar) வலிமை (Valimai) மற்றும் துணிவு (Thunivu) என அடுத்தடுத்த படங்களை தொடர்ந்து இயக்கியிருந்தார். அந்த வகையில் இவர் தளபதி விஜயின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமான ஜன நாயகன் (Jana nayagan) திரைப்படத்தையும் இவரே இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படமாது 6வது உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் திரைப்படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பாபிதியோல் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்த் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், தளபதி விஜயை வைத்து எந்த மாதிரியான திரைப்படத்தை எடுக்க ஆசைப்பட்டார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க:தோ கிலோமீட்டர்… தோ கிலோமீட்டர்… 8 ஆண்டுகளை நிறைவு செய்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்!
தளபதி விஜயை வைத்து இயக்க ஆசைப்பட்ட படம் குறித்து ஹெச். வினோத் பேச்சு :
நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத், “நான் விஜய் அண்ணாவை வைத்து ஒரு அரசியல் கதைக்களத்தில் படம் பண்ணவேண்டும் என்பதுதானே எது ஆசை. மேலும் பலமுறை, பல்வேறு கதையை அவருக்கு நான் சொல்லியிருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது. அவர் சொல்லியபடியே தளபதி விஜயை வைத்து அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் பேசிய வீடியோ பதிவு :
#JanaNayagan – Talks about Togetherism concept with Political Backdrop (Maatram)..⭐ Second Half is Gonna be Filled with Mass Political Scenes & Dialogues..💥 Audio Launch is Expected happen on Dec Last Week..🤝 #ThalapathyKacheri @actorvijay 🫵💥 pic.twitter.com/fhk31gEbmD
— Rocky Bhai (@Rockyy__420) November 17, 2025
ஜன நாயகன் திரைப்படத்தின் கதைக்களம் என்ன :
தளபதி விஜய்யின் இந்த ஜன நாயகன் படமானது அரசியல் கதைக்களத்தில் உருவாகிவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தெதே. அந்த வகையில் இப்படத்தில் பல்வேறு விதமான கதைகளும் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது அரசியல் பின்னணியுடன் மக்களின் ஒற்றுமையை பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இப்படத்தின் மைய கருத்தே “மாற்றம்” தான்.
இதையும் படிங்க: ‘பிக் ஃபேன் ப்ரோ’.. க்யூட் ரசிகர்களை சந்தித்த சிலம்பரசன்- வைரலாகும் வீடியோ!
மேலும் இப்படத்தின் 2ம் பாதியில் முழுக்க அரசியல் வசனங்கள் மற்றும் மக்களின் நிலை குறித்து உரையாடல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.