தமிழகத்தில் நீடிக்கும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை இருக்கும்?
பிப்ரவரி 28ஆம் தேதி மற்றும் மார்ச் 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், பிப்ரவரி 27, 2026: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழழுத்தம் நிலவுகிறது. இதன் காரணமாக, 27 பிப்ரவரி 2026 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் மிதமான மழை:
தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக டெல்டா மாவட்டங்கள், அதேபோல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களிலும் இப்பகுதிகளில் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: சத்துணவு அமைப்பாளர்கள்- ஊராட்சி செயலர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
பிப்ரவரி 28ஆம் தேதி மற்றும் மார்ச் 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகளில் நீடிக்கும் மழை:
அதனைத் தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 4ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்… அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தப்படும்… எடப்பாடி பழனிசாமி சூளுரை!
பனிமூட்டம் இருக்குமா?
பனிமூட்டத்தைப் பொறுத்தவரையில், இன்று வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல், பிப்ரவரி 28ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையிலும் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 36.8 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 36 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 33.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.