திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்… அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தப்படும்… எடப்பாடி பழனிசாமி சூளுரை!
Edappadi K Palaniswami: கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மக்கள வரிப்பணத்தை ஊழல் செய்தது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசாரணை நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ” மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ” என்ற பரப்புரை பயணத்தை இன்று வியாழக்கிழமை ( பிப்ரவரி 26) மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசியதாவது: மு. க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கருப்பு பலூன் விட்டார். ஆனால், தற்போது முதல்வரான பின்னர் வெள்ளை கொடி காண்பித்து சிகப்பு கம்பலம் விரித்து பிரதமரை வரவேற்றுள்ளார். இதன் மூலமே ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவது தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிவிட்டு தற்போது வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் நிலையில், அதிமுக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சியில் இடம்பெற்றிருந்த திமுக அப்போது எதற்காக மாநில சுயாட்சி பற்றி பேசவில்லை.
தேர்தல் நேரத்தில் மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுக
தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில சுயாட்சியை திமுக கையில் எடுத்து பேசி வருகிறது. திமுகவின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் மது பாட்டிலுக்கு ரூ.10 கொள்ளை அடித்து அதன்மூலம் ரூ.24 ஆயிரம் கோடி கட்சியின் தலைமைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவின்பேரில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மின்சார துறை மற்றும் கலால் துறைக்கு தற்போது வரை செந்தில் பாலாஜி தான் மறைமுகமாக அமைச்சராக இருந்து வருகிறார். இந்த லட்சணத்தில் தான் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!




திமுகவினர் தான் போதை பொருள்கள் விற்கின்றனர்
நகராட்சி நிர்வாக துறையில் ஊழல் நடைபெற்றதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் போதைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில், அதனை எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
திமுக ஆட்சியில் 52 குழுக்கள் அமைத்தும் பயனில்லை
திமுக ஆட்சி காலத்தில் 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் மூலம் எவ்வளவு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிட முடியுமா. கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் லேப்டாப் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது வழங்கப்பட்டிருப்பது தேர்தலை மையமாக வைத்து தான். தமிழகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் ஆள்வதால் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் மக்களுடைய வரிப்பணத்தை ஊழல் செய்தது குறித்து அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசாரணை நடத்தப்படும்.
மேலும் படிக்க: நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..