AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாமக யாருடன் கூட்டணி அமைக்கும்.. அறிவிப்பு எப்போது வெளியாகும்.. ராமதாஸ் வெளிப்படையாக அறிவிப்பு!

PMK Founder Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற தகவலை அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான முடிவை இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பாமக யாருடன் கூட்டணி அமைக்கும்.. அறிவிப்பு எப்போது வெளியாகும்.. ராமதாஸ் வெளிப்படையாக அறிவிப்பு!
பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதற்கு பதில்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 26 Feb 2026 17:10 PM IST

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மற்றும் மகனிடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி என அந்த கட்சியினர் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில், அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக எந்த கூட்டணியில் இணைவது என்பது தொடர்பான முடிவை எடுப்பதில் சற்று குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கெனவே அன்புமணி தரப்பு இணைந்துள்ள நிலையில், அந்த கூட்டணியில் இணைய முடியாத நிலை ராமதாஸ் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அந்த கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

பாமக வந்தால் விசிக வெளியேறும்

இதில், திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதை தவிர வேறு வழி இல்லை என்று அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். இதனிடையே, தமிழக வெற்றி கழகத்தில் ராமதாஸ் தரப்பு பாமக இணைய இருப்பதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், அது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால், கூட்டணி குறித்த முடிவை எடுப்பதில் ராமதாஸ் தரப்பு பாமகவுக்கு சற்று குழப்பமான சூழ்நிலையை நிலவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..

ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம்

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

திராவிட கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைக்கும்

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற சட்டமன்றத் தேர்தலில் திராவிட கட்சிகளோடு மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்க உள்ளது. இதில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை வருகிற பிப்ரவரி 28- ஆம் தேதிக்குள் முறைப்படி அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில் கூட்டணி குறித்து அறிவிப்பதற்கான களம் சரியாக அமையவில்லை. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெகவினர் முன் அனுமதி பெறாமல் இதை செய்யக்கூடாது… கட்சி தலைமை போட்ட புதிய ரூல்ஸ்!

Follow Us