Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

10 உரிமைகளை மீட்பதே நோக்கம்.. 100 நாள் நடைப்பயணத்தை அறிவித்த அன்புமணி..

Anbumani 100 Days March Program: தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பத்து நோக்கத்துடன் 100 நாள் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இந்த நடைபயணம் 2025 ஜூலை 25ஆம் தேதி கட்சி நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாள் அன்று தொடங்கப்படும்.

தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!

PMK Internal Issues : பாமகவில் உட்கட்சி பிரச்னை நிலவி வரும் நிலையில், கட்சியில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை ராமதாஸ் ஆதரவாளரான கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு – எங்கள் உரிமை .. பாமக 37 ஆம் ஆண்டு விழாவில் அன்புமணி திட்டவட்டம்..

Anbumani Ramdoss: அன்புமணி தமிழகத்தில் அமையும் ஆளும் அரசியலில் பங்கு வேண்டும் என்றும் அது தங்களது உரிமை என்றும் பேசியுள்ளார். அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சனை முடிவுக்கு வரும்.. பாமக மாநாட்டில் அன்புமணி இருப்பார் – ராமதாஸ் விளக்கம்..

PMK Internal Issue: அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே இருக்கும் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தற்போது முடிவு செய்ய முடியாது, செயற்குழு பொதுக்குழுவைக் கூட்டி அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

பா.ம.க.வில் உள்-கட்சி மோதல்: ராமதாஸ் சமூக வலைத்தள கணக்குகள் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

Ramadoss Accuses Anbumani Supporters: பா.ம.க.வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸின் சமூக வலைத்தளக் கணக்குகள் அன்புமணி ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டதாகவும், பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி! – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

PMK Internal Rift : பாமக நிறுவனர் ராமதாஸ், தன் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பதுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிகாரப் போட்டியில் தந்தை மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், பாமக எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தந்தை வீட்டில் இல்லாத சமயம்.. தைலாபுரம் விரைந்த அன்புமணி.. என்ன காரணம்?

Anbumani At Thailapuram House: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே அதிகாரப்போட்டி நீடித்து வரும் நிலையில், திண்டிவனத்தில் இருக்கும் தைலாப்புரம் இல்லத்தில் தந்தை ராமதாஸ் இல்லாத சமயத்தில், அன்புமணி அங்கு சென்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘என் பெயரை பயன்படுத்தக் கூடாது’ அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை.. உச்சகட்ட மோதல்!

PMK Ramadoss Anbumani Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, அன்புமணி தன்னுடைய பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வேண்டுமென்றால், எனது இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.

மகளுக்கு பாமகவில் பதவியா? – பாட்டு பாடி பதில் சொன்ன ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி பூசலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியில் தனக்கு தான் அனைத்து உரிமைகளும் இருப்பதாக நிறுவனர் ராமதாஸூம், தலைவர் அன்புமணியும் மாறி மாறி கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் கட்சி நிகழ்ச்சிகளில் ராமதாஸின் மகள் காந்திமதி தலைகாட்ட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு ராமதாஸ் அளித்த பதில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

பாமக தலைமைப் பதவிப் போர்: தேர்தல் ஆணையத்தில் முறையீடு..!

PMK Leadership Battle: பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளித்துள்ளார். 2025 மே 28 அன்று அன்புமணியின் பதவிக்காலம் முடிந்ததாகவும், ராமதாஸ் 2025 மே 29-ம் தேதி பொறுப்பேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

PMK Power Struggle: அன்புமணி புறக்கணிப்பு! கூட்டணி முடிவு ராமதாஸூக்கு மட்டுமே.. பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

PMK Internal Conflict: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான அதிகாரப் போர் கட்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழு கூட்டத்தில், அன்புமணியின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2026 தேர்தல் கூட்டணி முடிவை ராமதாஸ் மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. அன்புமணியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்த சர்ச்சை பாமகவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, சமூகநீதி பெயரை பயன்படுத்துவதா? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்

Anbumani Ramadoss: பள்ளி கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு சமூகநீதியை படுகொலை செய்து, விடுதிகளுக்கு சமூக நீதி பெயர் வைப்பதா என கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PMK Internal Rift: அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட வில்லை.. உறுதியாக சொன்ன ஜி.கே.மணி..!

Pattali Makkal Katchi Crisis: பாமகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஜி.கே. மணி விளக்கம் அளித்து, அன்புமணி நீக்கப்படவில்லை என்றும், செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ராமதாஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம்.. புதிய நிர்வாக குழுவை அறிவித்தார் ராமதாஸ்..

PMK Anbumani Removal: பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் தொடரும் உட்கட்சிப் பூசல்: கொறடா அருளை நீக்க அடுத்த திட்டம் இதுதான்..

PMK Internal Power Struggle: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான அதிகாரப் போட்டி கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கொறடா அருளை நீக்கி சிவக்குமாரை நியமிக்கக் கோரி அன்புமணி ஆதரவாளர்கள் மனு அளித்துள்ளனர். இந்தப் போட்டி சட்டப்பேரவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.