AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துரோகத்தின் பெயரால் காங்கிரஸை தோற்கடிப்பது திமுக தான் – அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு..

திமுக தரப்பில், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என தெளிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தொடர்பாக அகில இந்திய தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பியிருந்தனர்.

துரோகத்தின் பெயரால் காங்கிரஸை தோற்கடிப்பது திமுக தான் – அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Feb 2026 16:04 PM IST

சென்னை, பிப்ரவரி 16, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது திமுகதான் என்று கருத்து தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. 2006ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வகித்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் இடங்கள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

திமுக காங்கிரஸ் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு:

ஆனால் திமுக தரப்பில், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என தெளிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தொடர்பாக அகில இந்திய தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பியிருந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் வெளிப்படும் சூழலில், அன்புமணி ராமதாஸ் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக மாணவர் சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “இன்றைக்கு 70% மக்கள் தேர்தலில் வாக்களிக்க வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.

மேலும் படிக்க: நீதிபதி மீது அரிவாள் வீச்சு.. நூலிழையில் உயிர் தப்பினார்.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

மிகவும் மோசமான முதல்வர் என்றால் அது ஸ்டாலின் தான் – அன்புமணி:

தமிழ்நாட்டில் 16 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 12 முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களில் மிகவும் மோசமான முதல்வர் என்றால் அது ஸ்டாலின் தான். அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரிதல் இல்லை. அவர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் 28 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை நிர்வகிக்க முடியவில்லை என்றால் வீட்டுக்குச் செல்லுங்கள்.

காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது திமுக தான்:

திமுக கூட்டணியை அவர்களே முடித்துவிடுவார்கள். துரோகத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது திமுகதான். நிறைய சிக்கல்கள் உள்ளன. இந்த முறையும் அதுதான் நடக்கப்போகிறது; பொறுத்திருந்து பாருங்கள். மற்றவர்களைப் பற்றி பொருட்படுத்த வேண்டாம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது; வேகமாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான போட்டிதான். இதுதான் கள யதார்த்தம்,” எனப் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: ‘எந்தக்கட்சியிலும் நான் இல்லை.. பொதுவெளியில் விவாதம் வேண்டாம்’ – வழக்கறிஞர் மூலம் நடிகை த்ரிஷா அறிக்கை

திமுக–காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு கட்சிகளும் தற்போது வரை கூட்டணியிலேயே உள்ளன. அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆனால் காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகிச் செல்லும் என்ற பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழலில் அன்புமணியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.