AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த கன்னட பிரபலம்.. அட இவர்தான்!

Seyon Movie Update: கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புது திரைப்படம்தான் சேயோன். இதை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் நிலையில், சிறப்பாக உருவாகிவருகிறது. இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது யார் என விவரமாக பார்க்கலாம்.

Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த கன்னட பிரபலம்.. அட இவர்தான்!
சேயோன் படத்தில் இணைந்த ராஜ் பி.ஷெட்டி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jul 2026 15:23 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களின் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இறுதியாக சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில், பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இப்படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இப்படத்திற்கு பின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பின் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakmar Murugesan) இயக்கத்தில் சேயோன் (Seyon) என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்தில் ஏற்கனவே கன்னட நடிகர் ஒருவர் இணைந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது அது உண்மை என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சேயோன் படத்தில் பிரபல கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி (Raj B. Shetty) இணைந்துள்ளாராம். இவர் கன்னடத்தில் “டோபி” (Toby) என்ற படத்தில் நடித்து தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது சேயோன் படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தம்பி!

சேயோன் படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி:

இன்று 2026ம் ஆண்டு ஜூலை 6ம் தேதியில், நடிகர் ராஜ் பி ஷெட்டி தனது 38வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் சேயோன் படக்குழு அவரின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கையில், நடிகர் ராஜ்பி ஷெட்டி சேயோன் படத்தில் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்த படமானது ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகள் கொண்ட கதையில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது வெளியான இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் ராஜ் பி ஷெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சேயோன் படக்குழு வெளியிட்ட பதிவு:

சிவகார்த்திகேயன் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துவரும் சேயோன் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முழுமையாக நிறுவடைந்துள்ளதாம். கிட்டத்தட்ட 60 சதவீதம் இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழு திட்டம்.

இதையும் படிங்க: அவரை அந்த நிலையில் என்னால் பார்க்கமுடியாது.. கே பாக்யராஜின் இறுதிச்சடங்கிற்கு வாராத காரணத்தை வெளிப்படையாக சொன்ன ஊர்வசி!

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் நிலையில், பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகளும் வெளியாகி வரவேற்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us