Seyon: எல்லாம் இனிதே.. சேயோன் பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Viral Photo: நடிகர் கமல்ஹசானின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் சேயோன். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் பேமஸ் ஹீரோக்களின் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் உருவாகிவருகிறது. இவர் இறுதியாக இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2026ம் ஜனவரியில் வெளியான இப்படம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்கவில்லை. இதையடுத்து இவர் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் சேயோன் (Seyon). இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஏற்கனவே தாய் கிழவி என்ற படத்தை இயக்கி புகழ்பெற்றிருந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படம் அதிரடி கிராமத்து கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்ததாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நூறு சாமி படத்திற்காக சசி கொடுத்த அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் – இயக்குநர் வெற்றிமாறன்!
சேயோன் படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தய் பகிர்ந்த சிவகார்த்திகேயன் :
A beautiful land. A beautiful team. A beautiful beginning.#Seyon #சேயோன் pic.twitter.com/bKgqTOk8tu
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 13, 2026
சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது:
சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் அவருக்கு ஜோடியாக, தெலுங்கு இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துவருகிறார். இவர் துல்கர் சல்மானின் காந்தா படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், இவர் தமிழில் நேரடியாக நடிக்கும் படமாக சேயோன் படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் பாலா சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், மற்றும் ரேச்சல் போன்ற பல்வேறு பிரபலன்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம். இதுவும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்குவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ஹபீபி படத்தை புகந்து பேசிய மாரி செல்வராஜ்
கிட்டத்தட்ட 50 நாட்களுக்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்ட நிலையில், விரைவாக ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்து சிறப்பாக உருவாகிவருகிறதாம். இப்படத்தய் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.