அயோத்தி பட இயக்குநருடன் புது படத்தில் இணைந்ததை உறுதிசெய்த விஜய் ஆண்டனி!
Vijay Antony And Manthira Moorthy collaboration: நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராக படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவர் தயாரிப்பாளராகவும் இவர் இருக்கும் நிலையில், சமீபத்தில் சசி இயக்கத்தில் நூறு சாமி என்ற படத்தி நடித்து தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில், இதில் அயோத்தி பட இயக்குநருடன் புது படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக இருந்து, தற்போது நாயகனாக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் தொடர்ந்து படங்களில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார். இவரின் தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தை இயக்குநர் சசி (Director Sasi) இயக்கியிருக்கும் நிலையில், விஜய் ஆண்டனி இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஸ்வாசிகா (Swasika), கருணாஸ், முனீஸ்காந்த், அஜய் திஷன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். என்னதான் விஜய் ஆண்டனி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவரைவிடமும் இதில் ஸ்வாசிகாவின் கதாபாத்திரம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றிருந்த நிலையில், அதில் பல இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அப்போது அந்த நிகழ்ச்சியில் அயோத்தி (Ayodhi) பட இயக்குநர் மந்திர மூர்த்தியும் (Director Manthira Moorthy) கலந்துகொண்ட நிலையில், விஜய் ஆன்டனியுடன் புதிய படத்தில் இணையத்தை அவர் உறுதிசெய்துள்ளார்.




இதையும் படிங்க: திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது ஓ…! சுகுமாரி படத்தின் டீசர்
விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் மந்திர மூர்த்தி கூட்டணி:
இயக்குநர் மந்திர மூர்த்தி கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த படம் அயோத்தி. இப்படத்தில் சசிகுமார் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், மத நல்லிணக்கத்தை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்தது.
இதையும் படிங்க: நூறு சாமி படத்திற்காக சசி கொடுத்த அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் – இயக்குநர் வெற்றிமாறன்!
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் மந்திர மூர்த்தி புது படத்தை இயக்கவுள்ளாராம். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், இன்னும் இப்படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியாகவில்லை. சமீபத்தில் நூறு சாமி பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மந்திர மூர்த்தி, விஜய் ஆண்டனியுடன் படத்தில் இணைவதை உறுதிசெய்துள்ளார்.
அயோத்தி பட இயக்குநரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து வைரலாகும் பதிவு:
#VijayAntony Next Film Director #MantharaMoorthy
Confirmed 👍 #Noorusami Pre Release Event Happen In Kamala Cinemas pic.twitter.com/nNMnrhdFwR
— Movie Tamil (@_MovieTamil) June 12, 2026
நடிகர் விஜய் ஆண்டனி நூறு சாமி படத்திற்கு பிறகு லாயர் என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இதை இயக்குநர் ஜோஸுவா சேதுராமன் இயக்கிவருகிறார். இப்படத்திற்கு பிறகு உருவாகும் படத்தில்தான் விஜய் ஆண்டனி, இயக்குநர் மந்திர மூர்த்தியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.